செய்திகள் :

2024 நவம்பரில் 8 டன் தங்கத்தை வாங்கி குவித்த ரிசர்வ் வங்கி!

post image

மும்பை: உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் நவம்பர் மாதத்தில் மட்டும் 53 டன் தங்கத்தை வாங்கியுள்ள வேளையில், இந்திய ரிசர்வ் வங்கி 2024 நவம்பரில் மட்டும் எட்டு டன் தங்கத்தை வாங்கியுள்ளது என்று உலக தங்க கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தேர்தலைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சுணக்கத்தால், மத்திய வங்கிகள் இந்த உலோகத்தைக் குவிப்பதற்கான கூடுதல் உத்வேகத்தில் இறங்கியது.

ரிசர்வ் வங்கி, மற்ற மத்திய வங்கிகளைப் போலவே, தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் வாங்கி வருகிறது. குறிப்பாக புவிசார் அரசியல் பதட்டங்களால் தூண்டப்படும் நிச்சயமற்ற காலங்களில், தங்கத்தின் விலைகள் உயரும் என்பது கோட்பாடு. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், அந்நிய நிதி தொடர்ந்து வெளியேற்றம், பணவீக்கம், வேலையின்மை மற்றும் கடன் விகிதங்கள் அதிகரித்த போது தங்கம் கணிசமாக வளர்ந்துள்ளது.

இதையும் படிக்க: இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.85.73-ஆக முடிவு!

நவம்பரில் தனது கையிருப்பில் எட்டு டன் தங்கத்தைச் இணைத்தது மூலம், 2024ல் முதல் 11 மாதங்களில், 73 டன்களாகவும், மொத்த தங்க இருப்பு 876 டன்களாகவும் ரிசர்வ் வங்கி உயர்த்தி, போலந்திற்கு அடுத்தபடியாக இந்த ஆண்டின் இரண்டாவது பெரிய வாங்குபவராக தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சீன மக்கள் வங்கி ஆனது ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு தங்க கொள்முதலை வேட்டையை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனையடுத்து அதன் இருப்புக்களில் ஐந்து டன் தங்கத்தைச் இணைத்துள்ளது. இதன் மூலம் அதன் ஆண்டின் நிகர கொள்முதல் 34 டன்களாகவும், அதன் மொத்த தங்க இருப்பு 2,264 டன்னாக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: நேற்றைய சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

இதற்கிடையில், சிங்கப்பூர் நாணய ஆணையம் மிகப்பெரிய தங்க விற்பனையாளராக இருந்ததுள்ளது. அதன் தங்க இருப்புக்களை 5 டன் குறைத்ததும், அதன் பிறகு நிகர விற்பனை 7 டன்னாகவும், ஒட்டுமொத்தமாக அதன் தங்க இருப்பு 223 டன்னாகவும் உள்ளது.

2023 ஆம் ஆண்டு, இதே காலகட்டத்தில் வாங்கப்பட்ட உலோகத்தின் அளவை விட ரிசர்வ் வங்கியின் தங்க கொள்முதல் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என்று உலக தங்க கவுன்சில் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தரவுகளின்படி, ரிசர்வ் வங்கியிடம் மொத்த தங்க இருப்பு இப்போது 890 டன்னாக உயர்ந்துள்ளது. இதில் 510 டன் இந்தியாவிலள்ளது.

உலக தங்க கவுன்சில் கூற்றுப்படி, இந்த மாதத்தில் போலந்து 21 டன் தங்கத்தையும், உஸ்பெகிஸ்தான் 9 டன் தங்கத்தையும் வாங்கி உள்ளனர்.

ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.85.87-ஆக முடிவு!

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வலுவான அமெரிக்க நாணயம் ஆகியவற்றின் காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 13 காசு சரிந்து, வரலாறு காணாத வகையில் ரூ.85.87 ஆக முடிந்தது.இன்றைய வர... மேலும் பார்க்க

காளையின் ஆதிகத்தால் சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தை!

மும்பை: பலவீனமான உலகளாவிய சந்தைப் போக்குகள் மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேறுதல்களுக்கு மத்தியில் இன்றைய பங்குச் சந்தை வர்த்தகம் சரிவில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் கரடிகள் ஆதிக்கத்தால் ச... மேலும் பார்க்க

சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைந்தது!

பங்குச்சந்தை இன்று(ஜன. 8) கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை78,319.45 என்ற புள்ளிகளில் தொடங்கியது.நண்பகல் 12.50 மணிக்கு சென்செக்ஸ் 636.50 புள்ளி... மேலும் பார்க்க

இந்தியாவில் 300 கோடி டாலர் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்!

இந்தியாவில் 300 கோடி டாலரை (ரூ. 2.5 ஆயிரம் கோடி) முதலீடு செய்யவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். செய்யறிவு தொழில்நுட்பம் குறித்து மைக்ரோசாஃப்ட் சா... மேலும் பார்க்க

2வது காலாண்டில் ரூ.3.6 கோடி நஷ்டத்தை பதிவு செய்த மொபிகுவிக்!

புதுதில்லி: டிஜிட்டல் வாலட் நிறுவனமான, மொபிகுவிக், 2024 செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், ரூ.3.59 கோடி நஷ்டம் அடைந்துள்ளது.ஒன் மொபிகுவிக் சிஸ்டம்ஸ் லிமிடெட் அதன் ஒதுக்கீட்டு விலையுடன் ஒப்... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.85.73-ஆக முடிவு!

மும்பை: தொடர்ச்சியாக அந்நிய முதலீடுகள் வெளியேறி வருதவதும், பங்குச் சந்தையில் நிலவும் சுணக்கம், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றியை தொடர்ந்து, டாலரின் மதிப்பு வலுப்பெற்று வரு... மேலும் பார்க்க