செய்திகள் :

இந்தியாவில் 300 கோடி டாலர் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்!

post image

இந்தியாவில் 300 கோடி டாலரை (ரூ. 2.5 ஆயிரம் கோடி) முதலீடு செய்யவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

செய்யறிவு தொழில்நுட்பம் குறித்து மைக்ரோசாஃப்ட் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,

செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் இந்தியாவை முதன்மை நாடாக ஆக்க வேண்டும் என்பதே இந்த முதலீட்டின் நோக்கம் என்றும், தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பயிற்சி அளித்து செய்யறிவு மூலம் கிடைக்கும் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் கூறினார்.

செய்யறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், நாடு முழுவதும் புதிய வாய்ப்புகளை உருவாக்கிவருவதாகம் குறிப்பிட்டார்.

மேலும், 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு செய்யறிவு பயன்பாடு குறித்து பயிற்சி அளித்து அவர்களின் திறமையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அத்வாந்தா திட்டத்தை அறிமுகப்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனம், 2025ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்திருந்தது. அத்திட்டத்துடன் இணைந்து 2030க்குள் ஒரு கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதுவரை 24 லட்சம் பேருக்கு செய்யறிவு தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்துள்ளது. இதில், 65% பெண்கள், 74% ஆண்கள்.

செய்யறிவு தரவு மையங்களை இந்தியா முழுவதும் மைக்ரோசாஃப் நிறுவனம் பரவலாக்கி வருகிறது. இதுவரை உள்நாட்டு சந்தைக்காக 3 தரவு மையங்களை மைக்ரோசாஃப் நிறுவியுள்ளது. 2026க்குள் 4வது மையத்தை அமைக்க மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.85.87-ஆக முடிவு!

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வலுவான அமெரிக்க நாணயம் ஆகியவற்றின் காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 13 காசு சரிந்து, வரலாறு காணாத வகையில் ரூ.85.87 ஆக முடிந்தது.இன்றைய வர... மேலும் பார்க்க

காளையின் ஆதிகத்தால் சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தை!

மும்பை: பலவீனமான உலகளாவிய சந்தைப் போக்குகள் மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேறுதல்களுக்கு மத்தியில் இன்றைய பங்குச் சந்தை வர்த்தகம் சரிவில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் கரடிகள் ஆதிக்கத்தால் ச... மேலும் பார்க்க

சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைந்தது!

பங்குச்சந்தை இன்று(ஜன. 8) கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை78,319.45 என்ற புள்ளிகளில் தொடங்கியது.நண்பகல் 12.50 மணிக்கு சென்செக்ஸ் 636.50 புள்ளி... மேலும் பார்க்க

2வது காலாண்டில் ரூ.3.6 கோடி நஷ்டத்தை பதிவு செய்த மொபிகுவிக்!

புதுதில்லி: டிஜிட்டல் வாலட் நிறுவனமான, மொபிகுவிக், 2024 செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், ரூ.3.59 கோடி நஷ்டம் அடைந்துள்ளது.ஒன் மொபிகுவிக் சிஸ்டம்ஸ் லிமிடெட் அதன் ஒதுக்கீட்டு விலையுடன் ஒப்... மேலும் பார்க்க

2024 நவம்பரில் 8 டன் தங்கத்தை வாங்கி குவித்த ரிசர்வ் வங்கி!

மும்பை: உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் நவம்பர் மாதத்தில் மட்டும் 53 டன் தங்கத்தை வாங்கியுள்ள வேளையில், இந்திய ரிசர்வ் வங்கி 2024 நவம்பரில் மட்டும் எட்டு டன் தங்கத்தை வாங்கியுள்ளது என்று உலக தங்க கவ... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.85.73-ஆக முடிவு!

மும்பை: தொடர்ச்சியாக அந்நிய முதலீடுகள் வெளியேறி வருதவதும், பங்குச் சந்தையில் நிலவும் சுணக்கம், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றியை தொடர்ந்து, டாலரின் மதிப்பு வலுப்பெற்று வரு... மேலும் பார்க்க