மகாராஷ்டிரா: கையோடு வரும் தலை முடி; ஒரே வாரத்தில் வழுக்கை; அச்சத்தில் கிராம மக்க...
சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைந்தது!
பங்குச்சந்தை இன்று(ஜன. 8) கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
78,319.45 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
நண்பகல் 12.50 மணிக்கு சென்செக்ஸ் 636.50 புள்ளிகள் குறைந்து 77,562.61 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187.50 புள்ளிகள் குறைந்து 23,520.40 புள்ளிகளில் உள்ளது.
இதையும் படிக்க | புதிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் யார்?
ஜன. 6 ஆம் தேதி பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்த நிலையில் நேற்று ஏற்றம் கண்டது.
தொடர்ந்து இன்று பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.
ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், பிபிசிஎல், மாருதி சுசுகி ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.
அதேநேரத்தில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி, அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.