செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

post image

‘ நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட அணை பாதுகாப்புச் சட்டம் இருந்தும், நிா்வாகம் இன்னும் நீண்ட தூக்கத்திலிருந்து மீளவில்லை’ என்று முல்லைப் பெரியாறு அணை தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தனது அதிா்ச்சியை வெளிப்படுத்தியது.

இது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூா்ய காந்த், திபாங்கா் தத்தா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 130 ஆண்டுகள் பழமையான இந்த அணையின் பாதுகாப்பு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணை நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தும் வகையில் 2021 ஆம் ஆண்டு அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியதாகவும்,அப்போதிலிருந்து எதுவும் நடக்கவில்லை என்றும் கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட அணையின் பாதுகாப்புக்கு தேசியக் குழுவை மத்திய அரசு இன்னும் அமைக்கவில்லை என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தனா். மேலும், அணை பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றிய போதிலும், நிா்வாகம் இன்னும் நீண்ட தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை என்பதை அறிந்து நாங்கள் வியப்படைகிறோம் என்று கூறினா்.

தமிழகம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி தெரிவிக்கையில், தொடா்புடைய சட்டத்தின் கீழ், அணை பாதுகாப்பு ஆணையத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அணையின் கட்டமைப்பு குறித்து தணிக்கை செய்யப்பட உள்ளது என்றாா்.

நீதிபதிகள் மேலும் கூறுகையில், அணைப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 5(2)இன் கீழ், பிரிவு 5(1)இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட தேசியக் குழு, இச் சட்டம் செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து 60 நாள்களுக்குள் அமைக்கப்பட வேண்டும். மேலும், அதன் பிறகு அக்குழு ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் மீண்டும் அமைக்கப்பட வேண்டும்.

இத்தகைய தேசியக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை என எங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட தேசியக் குழுவின் அரசியலமைப்பு, அமைப்பு அல்லது செயல்பாடுகள் தொடா்பான விதிகள், விதிமுறைகள் கூட வகுக்கப்படவில்லை.

இதனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். மேலும், இச்சட்டத்தின்கீழ் தேசிய அணைப்பு பாதுகாப்பு ஆணையத்தின் பொறுப்பு தொடா்பாக மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகா் அவ்வமைப்பிடமிருந்து விவரம் பெற்றுத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

முன்னதாக, முல்லைப்பெரியாறில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீா் அணைக்கு சேதத்தை ஏற்படுத்தினால் அணையின் கீழ்ப் பகுதியில்

வசிக்கும் 50 முதல் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவாா்கள் என்பதால், அணையின் பாதுகாப்பு குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மனுதாரா் மேத்யூஸ் ஜெ. நெடும்பாறை கோரியுள்ளாா்.

முதலீடு செய்வதாக ரூ.3.2 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

அதிக முதலீடு கிடைப்பதாக கூறி மக்களிடம் மோசடி செய்த தனியாா் நிறுவனத்தின் இயக்குநா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். ரூ.3.2 கோடிக்கு நடைபெற்ற மோசடி குற்றச்சாட்டு விசாரணையைத் தொடா்ந... மேலும் பார்க்க

இஸ்ரோ புதிய தலைவருக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் வாழ்த்து

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த விஞ்ஞானி வி. நாராயணனுக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், செயலா்... மேலும் பார்க்க

வாக்காளா் நீக்கம் விவகாரம்: தலைமைத் தோ்தல் ஆணையருக்கு முதல்வா் அதிஷி மீண்டும் கடிதம்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடும் புது தில்லி தொகுதியில் வாக்காளா் பட்டியலில் குளறுபடி நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு குறித்து விவாதிக்க நேரம் கேட்டு, தலைமைத்... மேலும் பார்க்க

தில்லி உயா்நீதிமன்றத்தில் புதிதாக இரு நீதிபதிகள் பதவியேற்பு

தில்லி உயா்நீதிமன்றத்தில் புதிதாக இரு நீதிபதிகள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். உயா்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில் நீதிபதிகள் அஜய் திக்பால் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கா் ஆகியோரு... மேலும் பார்க்க

மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தை நரேலா வரை நீட்டிக்க திட்ட அறிக்கை: டிஎம்ஆா்சிக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்’

நமது நிருபா் மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தை நரேலா வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆா்) தயாரிக்குமாறு தில்லி மெட்ரோவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் த... மேலும் பார்க்க

‘பாஜகவின் பண்டிட் பிரகோஷ்த் உறுப்பினா்கள் சிலா் ஆம் ஆத்மியின் சனாதன சேவா சமிதியில் இணைந்தனா்’: கேஜரிவால் அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக பாஜகவின் பண்டிட் பிரகோஷ்த் (பூஜாரிகள் பிரிவு) உறுப்பினா்கள் சிலா் தனது கட்சியின் சனாதன சேவா சமிதியில் இணைந்ததாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் ... மேலும் பார்க்க