செய்திகள் :

Coffee: மார்னிங் காபி உடல் நலனுக்கு நல்லதா? - புதிய ஆய்வு செல்வதென்ன?

post image

காபியே கதி என இருக்கும் நபரா நீங்கள்? காபி குடிக்காமல் இருக்க முடியாதவர்கள் அந்த காபியை சரியான நேரத்தில் குடிப்பதன் மூலம் உடல்நலனுக்கு சிறந்ததாக காபியை மாற்ற முடியும் என அண்மையில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு நாளின் எந்த நேரத்தில் காபி குடிப்பதை விடவும் காலையில் குடிப்பது நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இரண்டு விதமாக காபி அருந்தும் பழக்கம்!

அமெரிக்காவில் நீண்டகாலமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 40,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களின் ஆரோக்கியம், ஊட்டச்சத்துகள் மற்றும் வாழ்க்கைமுறை கண்காணிக்கப்பட்டுள்ளது.

மக்கள் இரண்டு விதமாக காபி குடிப்பதைக் கண்டறிந்துள்ளனர். ஒரு சிலர் மதியத்துக்கு முன் காபி குடிக்கின்றனர். சிலர் நாள் முழுவதும் குடிக்கின்றனர்.

36%க்கும் மேலான நபர்கள் காலையில் காபி அருந்திகின்றனர். 14% பேர் நாள் முழுவதும் காபி அருந்துகின்றனர். மற்றவர்கள் இடைப்பட்ட நேரத்தில் காபி அருந்துகின்றனர்.

அமெரிக்காவின் துலானே பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த ஆய்வில் பங்கேற்ற 4,295 பேர் ஆய்வு நடந்த காலத்தில் மரணமடைந்துள்ளானர்.

Coffee நல்லது!

இந்த ஆய்வில் பலவிதமான காரணிகளை ஆராய்ந்து காபி அருந்தாதவர்களை விட காபி அருந்துகிறவர்கள் மரணமடைவதற்கான வாய்ப்புகள் 16% குறைவு எனக் கண்டடைந்துள்ளனர். அதிலும் இதயநோயால் மரணமடைவதற்கான வாய்ப்புகள் 31% குறைவு எனக் கூறுகின்றனர்.

ஆனால் நாள் முழுவதும் காபி குடிப்பவர்களுக்கு காபியால் உடல் நலத்தில் எந்த பயனும் இல்லை. அவர்கள் மரணம் அடைவதற்கான வாய்ப்புகளில் மாற்றமில்லை.

யுரோபியன் ஹார்ட் ஜர்னல் பத்திரிகையில் வெளியான இந்த ஆய்வில், "நாள் முழுவதும் காபி குடிப்பதை விட காலையில் மட்டும் காபி குடிப்பது மரண வாய்ப்புகளைக் குறைக்கிறது" என அழுத்தமாகக் கூறுகின்றனர்.

காலையில் மட்டும் காபி அருந்துங்கள்!

எனவே காபி அருந்துகிறோம் அல்லது அருந்தவில்லை என்பதை விட எந்த நேரத்தில் காபி அருந்துகிறோம் என்பது முக்கியம் எனக் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு பிற இன மக்களிடம் எப்படி செயலாற்றும் என்பதைக் கண்டறிய மேலும் பல ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமென்கின்றனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் காபியை நாம் அருந்து விதத்தாலும் மாறுபடும். உதாரணமாக சர்க்கரை சேர்த்து காபி அருந்துவதும் பெரும்பாலும் உடல் நலனுக்கு கேடானது என்றே மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நாள் முழுவதும் காபி அருந்துபவர்கள் இனி காலை மட்டும் காபி அருந்தும் பழக்கத்துக்கு மாறலாம் என பரிந்துரை செய்கிறது இந்த ஆய்வு.

China: ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் உள்ள நபர்; தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் விநோதம்!

சீனாவைச் சேர்ந்த லியு என்ற 59 வயது பெண்மணிக்கு ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருப்பது, நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது. அவரது அதிகாரபூர்வ ஆவணங்கள் அவரைப் பெண் என்கின்றன. அவருக்கு இரண்... மேலும் பார்க்க

``HMPV புதிய வைரஸ் அல்ல... யாரும் கவலைப்பட வேண்டாம்!" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

சீனா, மலேசியா ஆகிய நாடுகளில் பரவிவரும் Human Metapneumovirus எனும் HMP வைரஸ் இந்தியாவில் 3 பேருக்குப் பரவியிருக்கிறது. கர்நாடகாவில் இரண்டு குழந்தைகளுக்கும், குஜராத்தில் ஒரு குழந்தைக்கும் HMPV தொற்று ஏ... மேலும் பார்க்க

`பாதமே நலமா?' - ஆனந்த விகடன் மற்றும் ஆர்.கே மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம்!

மக்கள் அதிக அளவில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு, நோய்கள் வருவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையுடன் கூடிய பராமரிப்பு, அவற்றுக்கு முறையான சிகிச்சை ஆகியவற... மேலும் பார்க்க

Explained: ' முற்றிலும் புதியதா இந்த HMP வைரஸ்... இது ஏன் குழந்தைகளை பாதிக்கிறது?' | HMPV

'மறுபடியும் முதல்ல இருந்தா?' என்பது மாதிரி, மீண்டும் ஒரு வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது.கடந்த மாதத்தில் வந்த, 'HMP வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கியுள்ளது' என்ற தகவல் உலக நாடுகளை சற்று பீதியடைய வைத்தது... மேலும் பார்க்க

Human Barbie: `வயது முதிர்வைத் தடுக்க' மகனின் ரத்தமா... கிளம்பிய விவாதமும் பின்னணியும்!

தனக்கு தானே "ஹியூமன் பார்பி" என்று பட்டம் சூட்டிக்கொண்டவர்தான் அழகின் மேல் அதிக கவனம் கொண்ட Marcela Iglesias வயது 47. இவர் காஸ்மெட்டிக்ஸ் சார்ந்த செயல்முறைக்காக மட்டுமே ஒரு லட்சம் டாலர் $1,00,000 செலவ... மேலும் பார்க்க

HMPV: சீனாவில் பரவும் புதிய வைரஸ்; இந்தியாவைப் பாதிக்குமா? பொதுச் சுகாதார இயக்குநரகம் சொல்வதென்ன?

சீனாவில் மீண்டும் ஒரு புதிய வகை வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.கடந்த 2019 ஆம் ஆண்டில் உலக நாடுகளைப் புரட்டிப் போட்டிருந்தது கொரோனா வைரஸ். கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக... மேலும் பார்க்க