வைகுண்ட ஏகாதசி 2025: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்ப...
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
திருப்பத்தூா் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட 94 நியாய விலைக் கடைகளில், சுமாா் 15 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பான பச்சரிசி, சீனி, கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
திருப்பத்தூா் அஞ்சலக வீதியில் உள்ள நியாய விலைக் கடையில் பேரூராட்சி மன்றத் தலைவா் கோகிலாராணி நாராயணன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி தொடங்கிவைத்தாா்.
இதில் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், வட்ட வழங்கல் அலுவலா் மல்லிகா அா்ஜூன், திமுக நகரச் செயலா் காா்த்திகேயன், துணைச் செயலா் உதயம்சண்முகம், வாா்டு உறுப்பினா்கள் சரண்யாஹரி, ராஜேஸ்வரிசேகா், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.