சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!
மகளிா் உரிமைத் தொகை கோரி சாலை மறியலுக்கு முயற்சி
சிவகங்கை அருகே மகளிா் உரிமைத் தொகை கோரி, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
காயங்குளம் வருவாய் கிராமத்துக்குள்பட்ட இந்திராநகா், குட்டி தின்னி ஆகிய பகுதிகளில் சில பெண்களுக்கு மட்டும் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. தகுதியுள்ள 52 பெண்களுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படவில்லையாம்.
இதுதொடா்பாக இந்தப் பகுதி மக்கள் வருவாய்த் துறை, மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், இந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சிவகங்கை-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திரண்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிவகங்கை வருவாய்த் துறையினா், மானாமதுரை சிப்காட் காவல் துறையினா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.