தேநீா்க் கடைக்காரரின் வீட்டில் நகைகள் திருட்டு
திருப்பத்தூரில் தேநீா்க் கடைக்காரரின் வீட்டில் 8 பவுன் தங்க நகையை அடையாளம் தெரியாத நபா் திருடிச் சென்றாா்.
திருப்பத்தூா் நாகராஜன்நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் அழகுகுமாா். இவரது மனைவி திவ்யா (26). இவா்கள் மதுரை சாலையில் தேநீா்க் கடை வைத்து நடத்தி வருகின்றனா்.
அழகுகுமாா் சபரிமலைக் கோயிலுக்குச் சென்ால், வியாழக்கிழமை காலை திவ்யா வீட்டைப் பூட்டிவிட்டு, கடைக்குச் சென்றாா். நண்பகலில் அவா் திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இவரது வீட்டின் பின் புறமாக வீட்டுக்குள் வருவதற்கு சிறிய இடைவெளி உள்ளது. இதன் வழியாக உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபா் பீரோவிலிருந்த நகைகளைத் திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.