செய்திகள் :

`மண்ணாந்தை, தற்குறி... சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்’ - சீமானை எச்சரித்த துரைமுருகன்

post image
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து, தி.மு.க-வின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவரின் அறிக்கையில், ``மனித குலத்தின் சமூக விடுதலைக்கான மாபெரும் தலைவர் தந்தை பெரியார். தன் வாழ்நாளின் கடைசி நாட்கள் வரை சமூகநீதிக்காகச் சளைக்காமல் பாடுபட்ட திராவிட இயக்கப் பெருந்தலைவர் அவர். தன் மனதில் தோன்றிய சிந்தனைகளை எவருக்கும் அஞ்சாமல் துணிந்து கூறியவர். அவருடைய பகுத்தறிவு - சுயமரியாதைச் சிந்தனைகள் சமுதாயத்தின் இருட்டை விரட்டி வெளிச்சத்தை உண்டாக்கின. தன்னுடைய கருத்துகளாகவே இருந்தாலும் அதனைக் கேட்பவர்கள் தங்களுடைய சொந்த புத்தியினால் சிந்தித்து, அதன் பிறகே ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய உலகச் சிந்தனையாளர் தந்தை பெரியார்.

`மனிதர்களிடையே சாதி, மதம், மொழி, நிறம், பாலினம் என எந்தவகை ஏற்றத்தாழ்வும் இல்லாத சமத்துவச் சமுதாயம் அமைந்திட வேண்டும்’ என்ற உயர்ந்த இலட்சியத்துடன் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். அவருடைய கொள்கை உறுதியின் விளைவாக, தேர்தல் களத்தையே காணாமல் தன் இலட்சியங்களை அரசாங்கத்தின் சட்டங்களாகத் திட்டங்களாக மாறச் செய்து, தான் வாழும் காலத்திலேயே அவை நிறைவேறிடக் கண்டவர்.

துரைமுருகன்

`மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என அவரைப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடினார். கொள்கையில் எதிர்துருவமாக இருந்த ராஜாஜி, `என் அன்பான எதிரி’ என்று பெரியாரைப் பாராட்டினார். அவரோடு முரண்பட்டவர்களும்கூட அவருடைய தூய தொண்டினை, போராட்டக்குணத்தை, ஒளிவுமறைவின்றிக் கருத்துகளை வெளிப்படுத்தும் தன்மையைப் புகழ்ந்திடத் தவறவில்லை. `ஈ.வெ.ரா.பெரியார் இந்த மண்ணின் மணாளர்’ என்று புகழ்ந்துரைத்தார் அக்கிரகாரத்து அதிசய மனிதரான வ.ரா.

உயர்ந்த சிந்தனை கொண்ட மனிதர்கள், தெளிந்த உள்ளம் கொண்ட தலைவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் தந்தை பெரியாரின் கருத்துகளை மதிப்பார்கள். அவருடைய தொண்டினைப் போற்றுவார்கள். பெரியார் எந்த நேரத்தில், எந்தச் சூழலில், என்ன சொன்னார் என்று பெரியார் சொன்ன பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பார்த்துச் செயல்படுவார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து வந்து, பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட இயக்கம்தான். தந்தை பெரியாரின் இலட்சியத்தை அரசியல் வழியில் முன்னெடுத்தார் பேரறிஞர் அண்ணா. அப்போது இரு இயக்கங்களுக்குமிடையிலான கருத்து மோதல்கள் இருந்தன. அவற்றையெல்லாம் கடந்துதான், 1967-இல் பெரியாரின் வாழ்த்துகளுடன் ஆட்சிப் பொறுப்பேற்று, இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை என்றார் பேரறிஞர் அண்ணா. பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சமபங்கு கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

`அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்’ என்ற சட்டத்தை நிறைவேற்றி, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட முனைந்தவரும் அவர்தான். அந்தச் சட்டத்தின்படி அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி ஆணை வழங்கி, முள்ளை அகற்றியவர் முதலமைச்சர் - கழகத் தலைவர் அவர்கள். தந்தை பெரியாரின் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகவும், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகவும் கடைப்பிடிக்கிறது திராவிட மாடல் அரசு.

சீமான்

தந்தை பெரியாரின் கொள்கைகளே இன்றும் தமிழ்நாட்டை வழிநடத்துகின்றன. அதனால்தான் இதனை ‘பெரியார் மண்’ என்று சொல்கிறோம். சில மண்ணாந்தைகளுக்கு இது புரிவதில்லை. பெரியார் என்ன சொன்னார், எப்போது சொன்னார் என்பது பற்றி தெரியாமலும், பெரியார் சொல்லாதவற்றையும்கூட அவர் சொன்னதாக அபாண்டமாக அவதூறு பரப்பியும், யாருக்கோ ஏஜென்ட்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள், தங்கள் சொந்த அரிப்பைத் தீர்த்துக் கொள்வதற்காகப் பெரியார் என்ற ஆலமரத்தின் மீது உரசிப் பார்க்கின்றன. இதற்கும் தொலைநோக்குச் சிந்தனையாளரான பெரியாரே நமக்கு வழிகாட்டுகிறார்.

`மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம்’ என்று 1936-ம் ஆண்டிலேயே `குடிஅரசு’ ஏட்டில் பெரியார் எழுதியிருக்கிறார். அவர் சொல்லியுள்ளபடி, மானமற்ற கூட்டத்துடன் நாம் மல்லுக்கட்ட வேண்டியதில்லை. மானமும், அறிவும் உள்ளவர்கள் பெரியாரை இழிவு செய்ய மாட்டார்கள். பெரியார், தான் வாழும் காலத்திலேயே பல எதிர்ப்புகளை நேரடியாக எதிர்கொண்டு, இலட்சியப் போராட்டத்தில் வெற்றி கண்டவர். தன் மீதான அவதூறுகளை தன் கொள்கைத் தடியால் அடித்து நொறுக்கி, சமுதாயத்திற்கு விடியலைத் தந்தவர். அறிவிலிகளின் அவதூறுகளால் அவர் புகழை ஒருபோதும் மறைக்க முடியாது. தந்தை பெரியார் புகழை நாம் என்றென்றும் போற்றுவோம். அவர்மீது அவதூறு பரப்பி விளம்பரம் தேட நினைக்கும் இழிவான - மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம். எதையாவது செய்து, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கலாமா என நினைப்பார்களேயானால் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்.’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய ஜூ.வி; களத்தில் இறங்கிய அதிகாரிகள் - புத்துயிர் பெற்ற சிக்னல்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த இடம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, பர்கூர் செல்வதற்காக இந்த வழியை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நெடுஞ்சாலை அப... மேலும் பார்க்க

Greenland: 'கிரீன் லேண்ட் வேணும்' அடம்பிடிக்கும் ட்ரம்ப்... அமெரிக்காவால் வாங்க முடியுமா?!

'கிரீன் லேண்ட்' - நமது பள்ளிக்காலங்களை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால், சமூக அறிவியல் பாடத்தில் வந்த உலக நாடுகளின் வரைபடத்தில் எந்த நாட்டுடனோ, எந்தக் கண்டத்துடனோ புவியியல் ரீதியாக ஒட்டும் இல்லாத உற... மேலும் பார்க்க

மனிதவளத் திறன்... தமிழ்நாட்டுக்கு முதலிடம்... ஒரு டிரில்லியன் டாலர் வளர்ச்சிக்கு வழிவகுக்கட்டும்!

‘இந்தியாவில் தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதில், தமிழ்நாடு முதல் மாநிலமாக இருக்கிறது’ என்று 2023-24-ம் நிதி ஆண்டுக்கான வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையில் கூறியிருக்கிறது ரிசர்வ் வ... மேலும் பார்க்க

ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கும் ரஷ்ய மாணவிகளுக்கு ஊக்கத்தொகை - அறிவிப்பு வெளியிட்ட ரஷ்ய அரசு

ரஷ்யாவில் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கும் 25 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு ரூ.81,000 ஊக்கத்தொகை வழங்கவுள்ளது ரஷ்ய அரசு. ரஷ்யாவில் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட... மேலும் பார்க்க

`நாட்டின் 18% செல்வத்தை 2000 குடும்பங்கள் மட்டுமே..!' - தொழிலதிபர் சாந்தனு தேஷ்பாண்டே சொல்வதென்ன?

இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இது பொருளாதாரச் சமத்துவமின்மை எனக் குறிப்பிடப்பட்டுகிறது. அதாவது, பணக்காரர்கள் மேலும்... மேலும் பார்க்க

உயிரோடிருப்பவருக்கு இறப்புச் சான்று - முறைகேடான பத்திரப்பதிவால் வெளிச்சத்துக்கு வந்த மோசடி!

காரியாபட்டி நாசர் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் இருளாயி. இவர் குடும்பத்தின் பூர்வீக நிலம் திருச்சுழி பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில், இருளாயி இறந்துவிட்டதாக போலியாக சான்று பெற்று, அவர்... மேலும் பார்க்க