யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!
ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.85.87-ஆக முடிவு!
மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வலுவான அமெரிக்க நாணயம் ஆகியவற்றின் காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 13 காசு சரிந்து, வரலாறு காணாத வகையில் ரூ.85.87 ஆக முடிந்தது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 85.82 ரூபாயாக தொடங்கி, டாலருக்கு நிகராக இதுவரை இல்லாத அளவுக்கு 85.89 ரூபாயாக சரிந்து பிறகு ரூ.85.87-ஆக நிலைபெற்றது.
இதையும் படிக்க: கரடியின் ஆதிக்கத்தால் சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தை!
குறைந்த பொருளாதார வளர்ச்சி கணிப்புகள் குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தபோதிலும், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் மந்தமான உணர்வு மற்றும் அந்நிய நிதி தொடர்ந்து வெளியேற்றம் ஆகிய காரணங்களால் ரூபாய் வீழ்ச்சிக்கு வித்திட்டது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?