இலங்கை டெஸ்ட்: ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தை அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் நியமித்துளது.
ஜன.29 முதல் பிப்.6ஆம் தேதி வரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி இலங்கை செல்லவிருக்கிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான கடைசி போட்டிகளாகும்.
ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸின் மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), சேன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனோலி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மேத் குஹ்னேமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்பி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.
காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிராக விளையாடாத ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், இலங்கை தொடரிலும் இடம்பெறவில்லை.