BB Tamil 8 :`அப்படி போடு...' - பாடலுக்கு ஆவேசமாக நடனமாடும் சவுந்தர்யா - சுனிதா - வெல்லப்போவது யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 95-வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகி இருக்கிறார். இந்த சீசனின் கடைசி போட்டியாளராக வந்து, இப்போது முதல் பைனலிஸ்ட்டாக இவர் மாறியிருக்கிறார்.
இதனிடையே சுனிதா, வர்ஷினி, அர்ணவ், ரவீந்தர், சிவகுமார், சாச்சனா, தர்ஷா குப்தா, ரியா என எட்டு முன்னாள் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர். அவர்களால் உள்ளே உள்ள 8 போட்டியாளர்களில் இருவர் ஸ்வாப் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முதல் புரோமவில்
வெளியிலிருந்து வந்திருக்கும் 8 பேருக்கும் உள்ளே இருக்கும் 8 பேருக்கும் மத்தியில் நடனப் போட்டி நடக்கிறது. புரொமோ தொடங்கும்போதே, சுனிதாவும், சவுந்தர்யாவும் வேகமாக வெளியே ஓடிவருகிறார்கள். அவர்கள் வரும்போதே நடிகர் விஜய் - திரிஷா நடிப்பில் வெளியான கில்லி படத்தின் ஆல் டைம் ஃபேவரைட் சாங் அப்படி போடு பாடல் இசைக்கப்படுகிறது.
மேடையில் சௌந்தர்யாவும், சுனிதாவும் போட்டிப்போட்டுக்கொண்டு ஆடுகிறார்கள். சுற்றிலும் நின்று இருவரையும் கைதட்டி ஆரவரத்துடன் உற்சாகப்படுத்துகின்றனர் ஹவுஸ் மேட்ஸ். புரோமோவின் இறுதியில், சவுந்தர்யா மூச்சிரைக்க தரையில் படுத்திருக்க சிலர் அவரை எழுப்ப முயற்சிக்கிறார்கள்.