செய்திகள் :

Siragadikka Aasai: புதிய காதல் கதை; ரோகிணி பஞ்சாயத்து - நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?

post image
சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணியும், மனோஜும் பணத்தைப் பற்றி விவாதிக்கின்றனர். எப்படி பணத்தைப் புரட்டுவது, எப்படி ஏமாற்றிய நபரைக் கண்டுப்பிடிப்பது என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மனோஜ் ரோகிணியின் அப்பாவிடம் பணத்தைக் கேட்கச் சொல்கிறார். அதற்கு ரோகிணி கோபப்படுகிறார். என் அப்பா ஜெயிலில் இருக்கிறார், அவரிடம் பணத்திற்காக மட்டும் பேசுவது சரியாக இருக்காது என்று ரோகிணி சமாளிக்கிறார். மனோஜிடம் விஜயாவையும் ஜாடைமாடையாக எப்போதும் பணம் பணம் என்று என்னை நச்சரிக்கிறீர்கள் என்கிறார் ரோகிணி.

இறுதியில் மனோஜும் ரோகிணியும் பணத்தை ஏமாற்றியவரைத் தேடிக் கண்டுப்பிடித்து இழந்த பணத்தை திரும்பப் பெறலாம் என முடிவு செய்கின்றனர்.

Siragadikka aasai

மற்றொருபுறம் மீனாவும் முத்துவும் தீவிரமாக அந்த ஏமாற்றுப் பேர்வழியைத் தேடும் பணியில் இறங்கிவிட்டனர். இது சம்பந்தமாக இரு நடிகரின் வீட்டிற்கு மீனா செல்கிறார். அங்கு, `பூ வேண்டுமா?' என்பதுபோல் அந்த நபரிடம் கேட்கிறார். அந்த நடிகரும் `பூ வேண்டும், இனி கொண்டுவந்து கொடுங்கள்' என்கிறார்.

அந்த சமயம் பார்த்து அந்த வீட்டிற்கு சிந்தாமணி வருகிறார். அந்த நடிகரின் தங்கைக்கு திருமணம் என்பதால், அந்த மண்டப டெகரேஷன் ஆர்டரை அவருக்கு கொடுக்குமாரு கேட்க அந்த நடிகரும் ஒப்புக் கொள்கிறார். மீனா அங்கு வந்திருப்பது டெகரேஷன் ஆர்டரை வாங்கத் தான் என்று தவறாகப் புரிந்து கொள்ளும் சிந்தாமணி மீனாவை மிரட்டுகிறார்.

மீனா சிந்தாமணியின் மிரட்டலுக்குப் பயப்படாமல், `ஓ இங்க கல்யாணம் நடக்கப் போகுதா?', என்று சொல்லிவிட்டு, அந்த நடிகரை மீண்டும் சந்தித்து, மண்டப டெகரேஷன் ஆர்டரைத் தனக்குக் கொடுக்குமாறு சொல்லிவிட்டு வருகிறார். இது சிந்தாமணியை மேலும் கோபமூட்டுகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலில்
சிறகடிக்க ஆசை சீரியலில்

இத்தனை பரபரப்பான காட்சிகளுக்கு மத்தியில் ஒரு ஜாலியான காதல் காட்சியும் இடம்பெற்றது. இதற்கு முன்னர் மீனா திருமணமானவர் என்பது தெரியாமல் அவரை காதலித்து, வீட்டிற்கே சென்று பெண் கேட்ட முருகன், இம்முறை வித்யாவின் பைக்கைத் தெரியாமல் மோதிவிட, பைக் ரிப்பேர் ஆகிறது.

பொதுவாக பெண்களுக்கு அதீத மரியாதை கொடுக்கும் முருகன் கதாபாத்திரம், வித்யாவிடம் என் மீது தான் தவறு, நானே உங்க பைக் ரிப்பேர் செலவை ஏத்துக்குறேன் என்று சொல்லி, தன் பைக்குடன் டோ போட்டு அழைத்துச் செல்கிறார்.

இதனைப் பார்த்த சில இளைஞர்கள், வேண்டுமென்றே பைக்கின் மீது மோதிவிட்டு, இந்த பெண்ணை காதல் வலையில் விழ வைத்துவிட்டார் என்று பேசி கொண்டிருக்க அது வித்யாவின் காதில் விழுகிறது. வித்யா கோபப்படாமல் வெட்கப்பட்டு சிரிக்கிறார். வித்யாவுக்கு முருகனின் ஜென்டில்மேன் அணுகுமுறை பிடித்து விடுகிறது. இனி இவர்களில் காதல் காட்சிகள் வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Siragadikka aasai

முத்து மீனா வீட்டிற்கு வந்ததும் இன்று சமைக்கவில்லை, வெளியே உணவு வாங்கி வந்துவிட்டோம் என்று கூற ரோகிணி மனோஜுக்கு மட்டும் ஏன் வாங்கவில்லை என்று அண்ணாமலை கேட்கிறார். இதற்கு முன்னர் முத்து மனோஜிற்கு பிரியாணி வாங்கிக் கொடுத்தபோது மனோஜ் அவரை அவமானப்படுத்தியதைச் சொல்கிறார்.

மீனா ரோகிணிக்கு உணவு கொடுத்த போது, ரோகிணி அவமானப்படுத்தியதையும் முத்து சொல்கிறார். மனோஜ் மீனாவிடம் தோசை சுட சொல்ல, முத்து கோபப்படுகிறார்.

இறுதியில் ரோகிணியை தோசை சுடச் சொல்கின்றனர். இதெல்லாம் நடப்பது பணம் காணாமல் போனதால் தான் என்று விஜயா ரோகிணியை கடிந்து கொண்டு சீக்கிரமாக பணத்திற்கு ஏற்பாடு செய்ய சொல்கிறார்.

BB Tamil 8 : 'முத்து என் தம்பி, சாச்சனா பண்ணறது சரியில்ல' - காட்டமான ஜாக்குலின்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 94-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக... மேலும் பார்க்க

BB Tamil 8: `விதியை மீறிட்டீங்க வெளிய வந்திருங்க'- பிக் பாஸின் அதிரடி அறிவிப்பு; காரணம் என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 94-வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 93: `மிட் வீக் எவிக்சன்' அராஜகம் செய்த அர்னவ் - போட்டியாளர்களுக்கு நேர்ந்த சங்கடம்

இந்த எபிசோட், ‘பழிக்குப் பழி, புளிக்குப் புளி’ மோடில் இருந்தது. வெளியில் இருந்து வந்தவர்கள், பழைய காயங்களை மீண்டும் கிளறி ரத்தத்தின் ருசியைப் பார்த்தார்கள்.இதை கரிசனத்தோடும் மிருதுவாகவும் செய்தவர்கள் ... மேலும் பார்க்க

BB Tamil 8: சூர்யாவாக அருண்; த்ரிஷாவாக சௌந்தர்யா - பிக் பாஸ் வீட்டில் `ஆடிய ஆட்டம் என்ன?’

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 94-வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான... மேலும் பார்க்க

BB Tamil 8: ``அறம் அறம்னு அறுக்குறியே தவிர நீ செய்ற எதுலயும் அறம் இல்ல"- முத்துவை சாடிய சிவகுமார்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 93வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்... மேலும் பார்க்க

Siragadikka aasai : மனோஜைக் காப்பாற்றிய முத்து... நன்றி உணர்வு இல்லாத ரோகிணி

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் மனோஜ், ரோகிணி ஷோரூமில் இருக்கும் போது, அங்கு ரவி, ஸ்ருதி வருகின்றனர். முத்துவும் மீனாவும் வர சொன்னதாக சொல்கின்றனர்.சற்று நேரத்தில் முத்து, மீனா அண்ணாமலை, விஜய... மேலும் பார்க்க