ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? காவல் ஆணையருக்கு எதிராக பாஜக வழக்க...
BB Tamil 8: ``அறம் அறம்னு அறுக்குறியே தவிர நீ செய்ற எதுலயும் அறம் இல்ல"- முத்துவை சாடிய சிவகுமார்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 93வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகி இருக்கிறார். இந்த சீசனின் கடைசி போட்டியாளராக வந்து, இப்போது முதல் பைனலிஸ்ட்டாக இவர் மாறியிருக்கிறார்.
இதனிடையே ராணவ், மஞ்சரி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (ஜனவரி 6) வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்ட்ரி கொடுப்பார்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று வெளியான முதல் இரண்டு புரோமோவில் சுனிதா, வர்ஷினி, அர்ணவ் என மூன்று பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரோமோவில் சிவகுமார் வீட்டிற்குள் சென்றிருக்கிறார். ஒவ்வொருத்தருக்கும் ஒரு டேக் லைனைச் சொல்கிறார். அந்தவகையில் 'வரவர உங்க ப்ரெண்ட்ஷிப்பை மாற்றிக்கொண்டே இருக்கிறீர்களே உங்க லேட்டஸ்ட் ப்ரெண்ட் யாரு? என்று ஜாக்குலினைப் பார்த்துக் கேட்கிறார்.
'லவ் கன்டென்ட் மட்டும்தான் என்டர்டெயின்மென்ட் போலயே' என்று விஷாலைத் தாக்குகிறார். தொடர்ந்து 'அறம் அறம்னு அறுக்குறியே தவிர நீ செய்ற எதுலயும் அறம் இல்ல' என்று முத்துக்குமரனை சிவகுமார் சாடுகிறார்.