லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
BB Tamil 8: சூர்யாவாக அருண்; த்ரிஷாவாக சௌந்தர்யா - பிக் பாஸ் வீட்டில் `ஆடிய ஆட்டம் என்ன?’
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 94-வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகி இருக்கிறார். இந்த சீசனின் கடைசி போட்டியாளராக வந்து, இப்போது முதல் பைனலிஸ்ட்டாக இவர் மாறியிருக்கிறார்.
இதனிடையே ராணவ், மஞ்சரி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்ட்ரி கொடுப்பார்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. அந்தவகையில் சுனிதா, வர்ஷினி, அர்ணவ், ரவீந்தர், சிவகுமார், சாச்சனா, தர்ஷா குப்தா, ரியா என எட்டு பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கின்றனர். அவர்களால் உள்ளே உள்ள 8 போட்டியாளர்களில் இருவர் ஸ்வாப் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் முழுவதும் டாஸ்குகள், வாக்குவாதங்கள், மோதல்கள் இருந்தது. இந்நிலையில் இன்று (ஜனவரி 8) வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களுக்கும், டாப் 8 போட்டியாளர்களுக்கும் இடையே ஆடிய ஆட்டம் என்ன? என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது.
அதில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களை எடுத்து நடிகை வேண்டும். இதில் யார் வெற்றிப் பெறப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.