செய்திகள் :

கைதிகள் தயாரித்த பொருள்கள் விற்பனையில் முறைகேடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

post image

சிறையில் கைதிகள் தயாரித்த பொருள்கள் விற்பனையில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்தால், இடைநீக்கம் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

புழல் சிறையில் தண்டனைக் கைதியாக உள்ள தனது கணவா் சிறையில் பாா்த்த வேலைக்காக அவருக்கு வழங்கப்படவேண்டிய ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை எனக்கூறி புதுச்சேரியை சோ்ந்த கோகிலா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருள்களை விற்பனை செய்ததில் ரூ.14 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக மத்திய தணிக்கைத் துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளதாக மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பி.புகழேந்தி ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தாா். அதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிபதிகள் கண்டனம்: இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் இந்த விவகாரம் தொடா்பாக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் அறிக்கையை தாக்கல் செய்தாா். பின்னா் அவா், சிறையில் கைதிகள் தயாரித்த பொருள்களை விற்பனை செய்ததில் முறைகேடு செய்ததாக மூன்று அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக நியாயமான விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தவறு செய்தவா்களை திருத்துவதற்காக சிறைக்கு அனுப்பி வைக்கிறோம். ஆனால், அவா்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர வேண்டிய சிறைத்துறை அதிகாரிகளே குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என கண்டனம் தெரிவித்தனா்.

மேலும், இந்த விவகாரத்தில் தவறு செய்த உயரதிகாரிகள் உள்பட அனைவா் மீதும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் பாரபட்சமின்றி துறை ரீதியாக இடைநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா். அத்துடன் இதுதொடா்பான விசாரணையை துரிதப்படுத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வரும் ஏப்.4-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என அரசுக்கு அறிவுறுத்தினா்.

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

ஆந்திரம் மாநிலம், திருமலை திருப்பதி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் மு.க. ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: நாளை நியாய விலைக் கடைகள் செயல்படும்

சென்னை: பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜன.10) வெள்ளிக் கிழமை அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என அறிவிக்கப்ப... மேலும் பார்க்க

தேர்தல் வரும்போது பொங்கல் பரிசுத் தொகை: துரைமுருகன் சுவாரஸ்யம்

சென்னை: பொங்கல் பரிசுத் தொகை குறித்து பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தருவது பற்றி பார்க்கலாம் என்று நகைச்சுவையாகப் பதில் அளித்துள்ளார்.இதனால், சட்டப்ப... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: பொங்கல் தொகுப்பு விநியோகம் ரத்து!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொங்கல் தொகுப்பு விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை.ஈரோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து, அந்த த... மேலும் பார்க்க

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசியால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் மையப்பகுதியான கொக்கிரகுளம் பகுதியில்... மேலும் பார்க்க

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிரான தீர்மானம்: அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு!

ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.பல்கலைக்கழக துணைவேந்தர... மேலும் பார்க்க