செய்திகள் :

அனைவருமே செத்துவிடுவோம் என நினைத்தேன்: திருப்பதியில் உயிர் பிழைத்தவர் தகவல்

post image

திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தில் நேரிட்ட நெரிசலின்போது, 5 நிமிடத்தில் அனைவருமே செத்துவிடுவோம் என நினைத்தேன் என்கிறார் உயிர் தப்பிய பக்தர் ஒருவர்.

டி. வெங்கடலஷ்மி என்ற அந்த பக்தர், புதன்கிழமை நள்ளிரவில் நேரிட்ட சம்பவம் குறித்துப் பேசுகையில், ஒரு ஐந்து நிமிடத்தில் அனைவருமே செத்துவிடுவோம் என்றுதான் நினைத்தேன். நான் கடந்த 25 ஆண்டுகளாக கோயிலுக்கு வருகிறேன், இதுபோல நடந்ததேயில்லை. இந்தக் கூட்டத்தில் நானும் விழுந்துவிட்டேன், ஒரு ஆறு பேர் என்னை இழுத்து வெளியே போட்டு தண்ணீர் கொடுத்ததால் உயிர் பிழைத்தேன் என்கிறார்.

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தபோது, திடீரென முக்கிய நுழைவாயில் திறக்கப்பட்டதால், பக்தர்கள் கண்மூடித்தனமாக ஓடியபோது கீழே விழுந்தவர்களை மிதித்துக்கொண்டு மக்கள் ஓடியதில் 6 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.

இது பற்றி அவர் கூறுகையில், எல்லோரும் ஓடும்போது நான் தடுக்கிவிழுந்துவிட்டேன். ஆனால், என்னை யாரும் கவனிக்கவில்லை. என் மீது ஏறி ஓடுகிறார்கள். என்னால் மூச்சுக்கூட விட முடியவில்லை. பிறகு அங்கிருந்தவர்கள் என்னை இழுத்து வெளியே போட்டதால் தப்பினேன் என்கிறார்கள்.

மக்களுக்கும் ஓரிடத்தில் என்ன நடக்கிறது என்தை புரிந்துகொள்ளமுடியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

காலை முதல் வரிசையில் நிற்கிறோம். திடீரென ஒரு கேட் திறக்கப்பட்டதும், வரிசையை விட்டுவிட்டு பலரும் அங்கு ஓடினார்கள். அங்கிருந்தவர்கள் சொன்னார்கள், வரிசையை விட்டு வர வேண்டாம் என்று. ஆனால் யார் கேட்கிறார்கள் என்று கூறுகிறார் மற்றொரு பக்தர்.

சம்பவம் நடந்த இடத்தில் சுமார் 5,000 பேர் இருந்ததாகவும், காவல்துறையினரால், யாரையுமே கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் பக்தர்கள் கூறியுள்ளனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி, எஸ்விஎஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பக்தர்களில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் சிகிச்சை முடிந்து இவர்கள் அனைவரும் இன்று மாலை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பலியானவர்களின் உடல்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு, ஆந்திர முதல்வர் வருகை தர விருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8 மணிக்கு விஷ்ணு நிவாசம் அருகே இந்த சம்பவம் நேரிட்டுள்ளது. வரிசையில் இருந்த பக்தர் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை வெளியேற்றுவதற்காக நுழைவு வாயில் திறக்கப்பட்டது. இதுபற்றி தெரியாமல், வரிசையில் இருந்த பக்தர்கள் நுழைவு வாயிலுக்குள் ஒரே நேரத்தில் ஏராளமானோர் நுழைய முயன்றதால்தான் இந்த சம்பவம் நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

பல மணி நேரங்களாக பக்தர்கள் இங்கு காத்திருந்திருக்கிறார்கள். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்துள்ளது. அப்போதுதான் கதவு திறக்கப்பட்டதும் மக்கள் ஓடியதால் இந்த நெரிசல் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பதியில், பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாக கோயில் நிர்வாகம் கூறியிருந்தாலும், கட்டுக்கடாங்காதக் கூட்டத்தை சமாளிக்கத் தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றே பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

திருமலையில் வைகுண்ட ஏகாதசியின்போது ஏழுமலையானை தரிசிக்கவும், வைகுண்ட வாயில் வழியாகச் செல்லவும் தேவஸ்தானம் தரிசன டிக்கெட்டுகளை வியாழக்கிழமை காலை 5 மணிக்கு வழங்க முடிவு செய்து திருமலை திருப்பதி உள்பட 9 இடங்களில் 94 கவுன்ட்டர்கள் அமைத்திருந்தது.

வைகுண்ட ஏகாதசி நாள்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 2 - 3 லட்சம் வரை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வைகுண்ட வாயில் வழியாகச் செல்வதற்காக, வியாழக்கிழமை காலையில் டிக்கெட் பெற புதன்கிழமையே மக்கள் வரிசையில் நின்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு எச்எம்பிவி தொற்று உறுதி!

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு எச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட 80 வயது முதியவருக்கு எச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்... மேலும் பார்க்க

திருப்பதி விபத்து: டிஎஸ்பி, தேவஸ்தான நிர்வாகிகள் இடைநீக்கம்!

திருப்பதி கூட்ட நெரிசல் விவகாரத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட 2 பேரை இடைநீக்கம் செய்து முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். மேலும், திருப்பதி திருமலை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி, தேவஸ... மேலும் பார்க்க

திருப்பதி விபத்துக்கு யார் பொறுப்பு? பவன் கல்யாண் பதில்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபத்துக்கு அரசு முழு பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். சர்வதரிசன டிக்கெட் வழங்குவதில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திறமையற்ற ... மேலும் பார்க்க

மத்திய சிறையில் சீனாவின் ட்ரோன்?

போபால் சிறை வளாகத்தில் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் போபாலில் உயர் பாதுகாப்பைக் கொண்டுள்ள மத்திய சிறைக்குள் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய சிறை... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் சிக்கித் தவிப்பு!

சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் சிக்கினர்.சத்தீஸ்கரில் முங்கேலியில் கட்டுமானப் பணியில் உள்ள தனியார் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பிரான்ஸ் நாட்டுப் பெண்!

மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து பாஸ்கல் என்ற பெண்மணி உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் வருகிற 13-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வர... மேலும் பார்க்க