செய்திகள் :

மிகப்​ பெ​ரிய திட்டங்​கள் காத்​தி​ருக்கின்​றன: இஸ்ரோ புதிய தலை​வர் தக​வல்

post image

"​இஸ்ரோ அமைப்பு வெற்​றி​க​ர​மான பாதை​யில் நடை​போ​டு​கி​றது; மிக முக்​கி​யத் திட்டங்​க​ளில் சந்​தி​ர​யான்-4, ககன்​யான் திட்டங்​கள் குறிப்​பி​டத்​தக்​கவை' என்று இஸ்​ரோ​வின் புதிய தலை​வ​ரா​கப் பொறுப்​பேற்​க​வுள்ள வி.நா​ரா​ய​ணன் புதன்​கி​ழமை தெரி​வித்​தார்.

இஸ்​ரோ​வின் 11-ஆவது தலை​வ​ராக தமி​ழ​கத்​தைச் சேர்ந்த வி.நா​ரா​ய​ணன் செவ்​வாய்க்​கி​ழமை நிய​மிக்​கப்​பட்​டார். வரும் செவ்​வாய்க்​கி​ழமை (ஜன. 14) அவர் பொறுப்​பேற்​கி​றார்.

இந்​நி​லை​யில், திரு​வ​னந்​த​பு​ரத்​தில் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் அவர் கூறி​ய​தா​வது: விண்​வெ​ளித் துறைச் செய​ல​ராக, இஸ்ரோ தலை​வ​ரா​கப் பொறுப்​பேற்​பது மகிழ்ச்சி அளிக்​கி​றது. பல பெரிய தலை​வர்​க​ளால் வழி​ந​டத்​தப்​பட்ட இந்த அமைப்​பில் எனக்​கும் ஒரு பங்​க​ளிப்பு கிடைத்​தி​ருப்​பதை பெரும் அதி​ருஷ்​ட​மா​கவே கரு​து​கி​றேன்.

இஸ்ரோ தலை​வ​ராக நான் அறி​விக்​கப்​பட்ட தக​வல் முத​லில் எனக்கு பிர​த​மர் அலு​வ​ல​கத்​தில் இருந்து வந்​தது. அனைத்​தை​யும் பிர​த​மரே முடிவு செய்​கி​றார். அத்​து​டன் தற்​போ​தைய இஸ்ரோ தலை​வர் எஸ்.​சோ​ம​நாத்​தும் நான் தலை​வ​ரா​கத் தேர்ந்​தெ​டுக்​கப்​பட்ட தக​வ​லைத் தெரி​வித்​தார்.

இஸ்​ரோ​வில் அடுத்து மேற்​கொள்​ள​வுள்ள பணி​கள் குறித்து கேட்கி​றீர்​கள். வெற்​றி​க​ர​மான பாதை​யில் சென்று கொண்​டி​ருக்​கும் இஸ்​ரோ​வுக்கு இது முக்​கிய தரு​ணம் என்​பதை அனை​வ​ரும் அறி​வர். டிச. 30-ஆம் தேதி இஸ்ரோ தனது "ஸ்பே​டெக்ஸ்' ஆய்​வைத் தொடங்​கி​யது. இதில் செயற்​கைக்​கோள் ஒருங்​கி​ணைப்​புப் பணி​கள் விரைவில் நடை​பெ​றும்.

ககன்​யான் திட்டம் இஸ்ரோ முன்பு உள்ள மிக முக்​கி​யத் திட்ட​மா​கும். இந்​தத் திட்டத்​தின் ஒரு பகு​தி​யாக ராக்கெட் செலுத்​தும் பணி வெற்​றி​க​ர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கி​றது. "என்​வி​எஸ் 02' ராக்கெட் ஏவும் பணி ஸ்ரீஹ​ரி​கோட்​டா​வில் தீவி​ர​மாக நடை​பெற்று வரு​கி​றது. இந்த மாத இறு​தி​யில் ஜிஎஸ்​எல்வி லாஞ்​சர் மூலம் இது ஏவப்​ப​டும்.

அத்​து​டன் அமெ​ரிக்​கா​வின் வர்த்​தக செயற்​கைக்​கோளை இஸ்​ரோ​வின் மாக் 3 லாஞ்​சர் மூலம் செலுத்​தும் முயற்​சி​யும், ககன்​யான் திட்டத்​தில் ராக்கெட் ஒன்​றி​ணைக்​கும் பணி​யும் தற்​போது ஸ்ரீஹ​ரி​கோட்​டா​வில் நடை​பெற்று வரு​கி​றது.

"சந்​தி​ர​யான் 3' திட்டத்​தின் மூலம் நில​வின் தென் பகு​தி​யில் தரை​யி​றங்​கிய முதல் நாடு என்ற பெரு​மையை இந்​தியா பெற்​றதை அனை​வ​ரும் அறி​வர்.

அடுத்​த​கட்​ட​மாக சந்​தி​ர​யான் 4 திட்டத்​தின் மூலம் நில​வில் இருந்து கனி​மங்​களை சேக​ரித்து வரும் முயற்சி மேற்​கொள்​ளப்​ப​டும். இதற்​கான பணி​கள் ஏற்​கெ​னவே தொடங்​கப்​பட்​டு​விட்​டன.

இந்​தி​யா​வுக்​கென்று விண்​வெ​ளி​யில் சொந்​த​மாக விண்​வெளி நிலை​யம் அமைக்​கப்​ப​ட​வுள்​ளது. இதற்கு பிர​த​மர் ஒப்​பு​தல் அளித்​துள்​ளார். இந்த விண்​வெளி நிலை​யம் ஐந்து பகு​தி​க​ளைக் கொண்​ட​தாக இருக்​கும். அதில் முதற்​கட்ட பணி 2028-இல் தொடங்​க​வும் ஒப்​பு​தல் பெறப்​பட்​டுள்​ளது என்​றார்.

அனைவருமே செத்துவிடுவோம் என நினைத்தேன்: திருப்பதியில் உயிர் பிழைத்தவர் தகவல்

திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தில் நேரிட்ட நெரிசலின்போது, 5 நிமிடத்தில் அனைவருமே செத்துவிடுவோம் என நினைத்தேன் என்கிறார் உயிர் தப்பிய பக்தர் ஒருவர... மேலும் பார்க்க

புதுதில்லியில் மட்டுமே போட்டியிடுவேன்: கேஜரிவால்

புதுதில்லியில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் 2-வது தொகுதியில் போட்டியிடப்போவதாக பாஜக தலைவர்கள் கூறிய கருத்துக்கு, புது தில்லியில் மட்டுமே போட்டியிடப் போவதாகத் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவா... மேலும் பார்க்க

அரசுக் கிடங்கில் கெட்டுப்போன தானியம்! ம.பி. மக்கள் ஒரு மாதம் சாப்பிட்டிருக்கலாம்!!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு மாத காலத்துக்கு உணவளிக்கும் அளவிலான தானியங்கள், அரசுக் கிடங்கில் வைக்கப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது.இது கெட்டுப்போனதால், கால்நடைத் தீவனமாகக... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: ஆம் ஆத்மிக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை தொடர்ந்து சிவசேனை(உத்தவ் அணி) கட்சியும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என... மேலும் பார்க்க

திருப்பதி கூட்ட நெரிசல்.. என்ன நேர்ந்தது?

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தபோது, திடீரென முக்கிய நுழைவாயில் திறக்கப்பட்டதால், பக்தர்கள் கண்மூடித்தனமாக அதைநோக்கி ஓடியபோது கீழே விழுந்தவர்களை மிதித்துக்... மேலும் பார்க்க

பொங்கலுக்கு ஊருக்குப் போறீங்களா? இந்த வாட்ஸ்ஆப் சேவை பற்றி தெரியுமா?

தமிழக மக்கள் பலரும் தற்போது சிந்தித்துக் கொண்டிருப்பது பொங்கலுக்கு ஊருக்குப் போவது பற்றித்தான். அப்படி ரயிலில் பொங்கலுக்கு ஊருக்குப் போகும்போது, இந்த வாட்ஸ்ஆப் சேவை பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டு... மேலும் பார்க்க