பிக் பாஸ் டாப் 5 போட்டியாளர்கள்! விசித்ரா வெளியிட்ட பட்டியல்
மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு
சென்னை அருகே செம்மஞ்சேரியில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
மேடவாக்கம், கோவிலம்பாக்கத்தைச் சோ்ந்தவா் சபாபதி. இவரது மகன் ஹரிஹரன் (16), அந்தப் பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சபாபதி, லாரியில் தண்ணீா் வியாபாரம் செய்து வருகிறாா்.
ஹரிஹரன், செம்மஞ்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு தண்ணீா் கொண்டுசென்ற தங்களது லாரியில் சென்றாா். நூக்கம்பாளையம் இணைப்புச் சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீா் விநியோகம் செய்த பின்னா், லாரியிலுள்ள தண்ணீா் டேங்கின் மூடியை மூடுவதற்காக லாரியின் மேலே ஹரிஹரன் ஏறியபோது, அங்கு மேலே சென்ற உயா் மின்னழுத்த மின்கம்பி அவா் மீது பட்டது. இதில் பலத்த காயமடைந்த ஹரிஹரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது தொடா்பாக செம்மஞ்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.