BB Tamil 8 : 'முத்து என் தம்பி, சாச்சனா பண்ணறது சரியில்ல' - காட்டமான ஜாக்குலின்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 94-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகி இருக்கிறார். இந்த சீசனின் கடைசி போட்டியாளராக வந்து, இப்போது முதல் பைனலிஸ்ட்டாக இவர் மாறியிருக்கிறார்.
இதனிடையே சுனிதா, வர்ஷினி, அர்ணவ், ரவீந்தர், சிவகுமார், சாச்சனா, தர்ஷா குப்தா, ரியா என எட்டு பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கின்றனர். அவர்களால் உள்ளே உள்ள 8 போட்டியாளர்களில் இருவர் ஸ்வாப் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரோமவில் தீபக்கிடம் சாச்சனாவின் செயல்கள் பற்றி ஜாக்குலின் பேசுகிறார். "வெளியில் உள்ள விமர்சனங்களை முன்வைப்பது பிரச்னை இல்ல. வெளியில ஆயிரம் ஒப்பீனியன் இருக்கும். முத்து எனக்கு உண்மையாவே தம்பிதான். ஆனா சாச்சனா உள்ள இருந்துதான் வெளியில போயிருக்கா, அவளுக்கு தெரியும்ல சில விஷயங்கள் எல்லாம். நான் முத்துகிட்ட சொன்னேன்.
சாச்சனா பண்றது சரியில்லனு. அவகிட்ட சொல்லிறுனு. முத்துவைக் காப்பாத்துறங்குற பேருல என்னையும், முத்துவையும் வச்சு போடுற மீம்ஸ் எல்லாம் போடுறது புடிக்கல என்று சொல்கிறா. புடிக்கல என்றால் பார்க்காம இருக்க வேண்டியதுதானே. நானும் அதெல்லாம் போய் பார்க்க போறது இல்ல" என்று சாச்சனாவை ஜாக்குலின் சாடியிருக்குகிறார்.