மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை
BB Tamil 8: `Manipulate-னா என்னானு இவங்களாலதான்...' குற்றச்சாட்டும் சுனிதா - கதறி அழும் சவுந்தர்யா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 95-வது நாளுக்கான மூன்றாவது புரோமோவும் வெளியாகிவிட்டது.
இறுதிக்கட்டத்தில் இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகி இருக்கிறார். இந்த சீசனின் கடைசி போட்டியாளராக வந்து, இப்போது முதல் பைனலிஸ்ட்டாக மாறியிருக்கிறார்.
இதனிடையே சுனிதா, வர்ஷினி, அர்ணவ், ரவீந்தர், சிவகுமார், சாச்சனா, தர்ஷா குப்தா, ரியா என எட்டு முன்னாள் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர். அவர்களையும், இப்போது வீட்டில் இருக்கும் போட்டியாளர்களையும் மோதவிட்டு வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறார் பிக்பாஸ்.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முதல் புரோமவில் வெளியிலிருந்து வந்திருக்கும் 8 பேருக்கும் உள்ளே இருக்கும் 8 பேருக்கும் மத்தியில் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் ரீ பிளேஸ்மென்ட் செய்யத் தகுதியானவர்கள் யார் யார் என்றக் கேள்வியுடன் தொடங்குகிறது புரொமோ. அதில் பேசும் சுனிதா, ``இந்த வீட்லயே ஒருத்தர் ரொம்ப வீக் அது ஜாக்லின். manipulate-னா என்னானு ஒரு பிரின்சிபலே இவங்களாலே வெளியே போயிட்டு இருக்கு. ஜாக்லின் - சவுந்தர்யா இவங்க ரெண்டுபேர்கிட்டயும் இருக்குற ஒரு காமன் விஷயம் இவங்க ரெண்டு பேரும் ஜென்யூன் இல்ல." எனக் காரசாரமாக பேசியிருக்கிறார்.
இந்த வார்த்தைகளால் சப்தமாக அழுதுக்கொண்டே பேசும் சவுந்தர்யா, ``இவ்ளோநாள் இருந்ததுக்கு அர்த்தமே இல்லாதமாதிரி அவங்க பண்றாங்க..." எனப் புலம்புகிறார். இரண்டு தரப்புக்கு மத்தியில் விவாதங்களைக் கிளப்பும் இன்றைய நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடும் என எதிர்பார்க்கலாம்.