காஞ்சிபுரம்: யார் திவ்ய பிரபந்தம் பாடுவது? மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!
மதுபாட்டில்கள் விற்பனை செய்தவா் கைது
பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை விற்பனை செய்யவரைப் போலீஸாா் கைது செய்து நீவியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கள்ளப்பட்டி கிராம பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, அரும்பாவூா் காவல்நிலைய சாா்பு ஆய்வாளா் சிற்றரசன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்த, அதே கிராமத்தைச் சோ்ந்த குமாரசாமி மகன் தேவராஜை (54) கைது செய்து, அவரிடமிருந்து 30 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட தேவராஜை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.