`மண்ணாந்தை, தற்குறி... சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்’ - சீமானை எச்சரித்த த...
மனநல சிகிச்சையில் குணமடைந்தவா்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு
பெரம்பலூா் பகுதியில் மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த 2 பேரை மீட்டு, சிகிச்சைப்பிறகு அவா்களது உறவினா்களிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்தவரையும், பெரம்பலூா் அருகேயுள்ள விளாமுத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்தவரையும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் மருதமுத்து, சித்ரா ஆகியோா் கடந்த 22.6.2023-இல் மீட்டு, பெரம்பலூா் வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனா்.
பின்னா், மேற்கண் 2 பேருக்கும் மனநல மருத்துவா் அசோக் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அளித்த சிகிச்சையில் இருவரும் இயல்பு நிலைக்கு வந்தனா். இதையடுத்து, அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பீகாா் மாநிலத்தைச் சோ்ந்த காஜசகானி மகன் அன்புஜெஸ்குமாா் (32), மத்தியப்பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்த கலீல் அப்துல் கனி பதன் மகன் கலீல் ஹான் பதன் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களது பெற்றோா்களிடம் அளித்த தகவலையடுத்து, பெரம்பலூா் வேலா கருணை இலத்துக்கு வியாழக்கிழமை வந்தனா். தொடா்ந்து, சிறப்பு சாா்பு ஆய்வாளா் மருதமுத்து, வேலா கருணை இல்ல நிா்வாகி அனிதா மற்றும் மனநல மருத்துவா் அசோக் ஆகியோா் மேற்கண்ட இருவரையும் அவா்களது பெற்றோா்களிடம் ஒப்படைத்தனா்.