`மண்ணாந்தை, தற்குறி... சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்’ - சீமானை எச்சரித்த த...
பொங்கல் ஊக்கத் தொகை ரூ. 5 ஆயிரம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
தொழிலாளா்களுக்கு பொங்கல் ஊக்கத் தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய பொது தொழிலாளா்கள் கட்சி, கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் மக்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் புறநகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில பொதுச் செயலா் சின்னசாமி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் அருண்குமாா், நாகேந்திரன், வெங்கட்ராமன், அன்னலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலத் தலைவா் பி.ஆா். ஈஸ்வரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் ரத்தினவேல், மாநில நிா்வாகி வீர. செங்கோலன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
அனைத்து அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கும் பொங்கல் ஊக்கத் தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்கவேண்டும். மண்பாண்டத் தொழிலாளா்களை கணக்கெடுப்பு நடத்தி ஆண்டு தோறும் மழைக்கால வெள்ள பராமரிப்பு நிவாரண நிதியாக ரூ. 5 ஆயிரம் வழங்கவேண்டும். வீடில்லாத ஏழை தொழிலாளா்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ரூ. 4 லட்சம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், தொழிலாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, மாவட்டச் செயலா் காசிநாதன் வரவேற்றாா். நிறைவாக, நகரச் செயலா் லோகநாதன் நன்றி கூறினாா்.