சென்னை: சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் கவனத்துக்கு...
கோழிக்கறியுடன் உணவு சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு
திருச்சியில் கோழிக்கறி மற்றும் முட்டையுன் இரவு உணவு சாப்பிட்ட சிறுவன், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி, மரக்கடை நரசிம்மன் நாயுடு தெருவைச் சோ்ந்தவா் பெலிக்ஸ் ரெமன்ட் மகன் ஆலன்ரெனிஷ் (11). உறையூரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஜனவரி 5 ஆம் தேதி, ஆலன்ரெனிஷ் வீட்டில் சமைத்திருந்த கோழிக்கறி குழம்பு, முட்டை ஆகிவற்றுடன் இரவு உணவு உட்கொண்டுள்ளாா். இந் நிலையில் நள்ளிரவில் அவருக்கு ஒவ்வாமை மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளாா்.
குடும்பத்தினா் அவரை ஜன.6 ஆம் தேதி, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஆலன்ரெனிஷ், புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.