யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!
Book Fair: "தலித் பெண்களின் உலகம்..." - அழகிய பெரியவனின் நூலுக்கு அட்டைப்படம் வரைந்த சிறுமி
தன் படைப்புகள் மூலம் உழைக்கும் மக்களின் அரசியலையும் வாழ்வியலையும் பேசி வரும் முக்கியமான எழுத்தாளர் அழகிய பெரியவன். பல விருதுகளைப் பெற்ற அவரின் தீட்டு, குறி உள்ளிட்ட 6 கதைகளைத் தொகுத்து 'அழகிய பெரியவன் குறுநாவல்கள்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளது நீலம் பதிப்பகம்.
ஓவியரும் எழுத்தாளருமான சந்தோஷ் நாராயணனின் மகள் ஆறாம் வகுப்பு படிக்கும் காயம்பூ, இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை வரைந்துள்ளார்.
இது குறித்து ஓவியர் காயம்பூவிடம் பேசினோம். "நான் இப்போ ஆறாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கேன். இதை நான் Ipad இல் தான் வரைஞ்சேன். ஊர்ல லேடீஸ்லாம் உட்காந்து இருக்க படங்களை எடுத்து கிராப் பண்ணி அது மேலேயே டிஜிட்டல் ஓவியமா வரைஞ்சேன். ஒரு மாசத்துக்கு முன்னாடி இதை வரைஞ்சேன். அப்பா இந்த ஓவியத்தைப் புத்தகத்துக்குக் கொடுத்தாங்க."
மேலும் இது குறித்து காயம்பூவின் தந்தை ஓவியர் சந்தோஷ் நாராயணன் கூறியதாவது, "அழகிய பெரியவனின் கதைகள் பெரும்பாலும் கிராமப்புறத்துப் பெண்களுடைய வாழ்வியலைப் பேசும் வகையில் இருக்கும். அதைப் பற்றி நானும் நீலம் பதிப்பகத்தில் உள்ள வாசுகி பாஸ்கரும் பேசிக்கொண்டிருக்கும் போது இந்த புத்தகத்தின் அட்டைப்படமாகப் பெண்கள் ஓவியத்தை வைக்கலாம் என முடிவெடுத்தோம்.
நாம் வரைவதற்குப் பதில் மகள் காயம்பூவே வரைந்து பார்க்கட்டுமே என நினைத்து அவரிடத்தில் சொன்னேன். பின் இருவரும் இணையத்தில் படங்களை எடுத்தோம் பின் காயம்பூவே அதனை Illustrate செய்து முடித்தார். கிராமத்து அதிலும் முக்கியமாக தலித் பெண்களுடைய உலகத்தை அட்டையில் பிரதிபலிக்கும் வேண்டும் என்பதுதான் எங்கள் இருவருடைய யோசனை" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.