குளிா் கண்ணாடியில் கேமரா- அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவா் கைது
Book Fair: "வரலாற்றை எழுத வரலாறு முக்கியம்.." - ஆ.இரா. வேங்கடாசலபதியின் பரிந்துரைகள் என்னென்ன?
திராவிட இயக்கமும் வேளாளரும், வ.உ.சி.: வாராது வந்த மாமணி, பாரதி ‘விஜயா’ கட்டுரைகள், அந்தக் காலத்தில் காப்பி இல்லை, தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை போன்ற படைப்புகளைக் கொடுத்த எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி. அவர் எழுதிய `திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908' என்ற புத்தகத்துக்கு இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு ஆளுமைகளிடமிருந்தும் படைப்பாளிகளிடமிருந்தும் தொடர்ந்து பாராட்டு பெற்றவரும் வேங்கடாசலபதியை, சென்னையில் நடைபெற்றுவரும் 48 வது புத்தகக் கண்காட்சியில் சந்தித்துப் பேசினோம். விருதுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டுப் படித்துக்கொண்டிருக்கும், படிக்க நினைக்கும், பரிந்துரைக்கும் புத்தகங்கள் குறித்துக் கேட்டோம் . நம் கையிலிருந்த குறிப்பேட்டை வாங்கி கடகடவென அவர் எழுதிக் கொடுத்த புத்தகங்கள்,
1. பாரதியியல் யார் அந்த பேதை - ய. மணிகண்டன்,
2. அப்படியெல்லாம் மனசு புண்படக்கூடாது - பெருமாள் முருகன்,
3. The Burning Earth - Sunil Amrith,
4. வாடிவாசல் (graphical novel),
அவரின் சமீபத்திய வெளியீடு குறித்து கேட்டதற்கு Swadeshi Steam: V.O. Chidambaram Pillai and the Battle against the british என்ற படைப்பு குறித்துப் பேசினார். பெரும்பாலும் வரலாற்றுப் படைப்புகளுக்கே நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பது போல் இருக்கிறதே என்று கேட்டோம்
"பிற படைப்புகளுக்குக் கொஞ்சம் களமும் கற்பனையும் இருந்தால் போதும்.. ஆனால் வரலாற்றை எழுதும் போது வரலாறு முக்கியம்" என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...