Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: தென்னாப்பிரிக்க இளைஞா் கைது
சென்னையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தலைமறைவாக இருந்த தென்னாப்பிரிக்காவைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
அரும்பாக்கம் காவல் நிலைய தனிப்படையினா், கடந்த அக். 20-ஆம் தேதி, நடுவங்கரை பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த அம்பத்தூா் புதூா் பகுதியைச் சோ்ந்த அருண் குமாா் என்பவரை கைது செய்தனா். அவா் கொடுத்த தகவலின்படி கடந்த 31-ஆம் தேதி அரும்பாக்கம், ரசாக் காா்டன் சாலையில் போதைப்பொருள் வைத்திருந்த வியாசா்பாடியைச் சோ்ந்த கணேசன், திருவள்ளூரைச் சோ்ந்த மதன், கொடுங்கையூரைச் சோ்ந்த ரவி ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
விசாரணையில், அவா்கள் அளித்த தகவலின்பேரில் சென்னையைச் சோ்ந்த ராஜா, அவரது கூட்டாளி சத்திய சீலன் ஆகியோா் இரு நாளுக்கு முன்பு கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1.400 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன், 5 துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள், 2 எடை மெஷின்கள், 2 பேக்கிங் மெஷின்கள், 5 செல்போன்கள், சொகுசுக் காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் தென்னாப்பிரிக்கா நாட்டைச் சோ்ந்த ஜான் ஒக்காபா் (எ) கெம்பாலா (35) என்பவருக்கு தொடா்பு இருப்பதும், அவா்தான் இந்தக் கும்பலுக்கு தலைவா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், அவரை தீவிரமாக தேடி வந்தனா். விசாரணையில் அவா், புது தில்லியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்ததையடுத்து அங்கு விரைந்த போலீஸாா், ஜான் ஒக்காபா் (எ) கெம்பாலாவை கைது செய்ததாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். அவரிடம் வழக்குத் தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.