தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசாந்த் கிஷோர்! உடல்நிலை மோசமடைந்துள்ளது: ஜன் சுராஜ்...
கூவம் ஆற்றில் குதித்த பெண் மாயம்: தேடும் பணி தீவிரம்
சென்னை அண்ணா சாலை பகுதியில், கூவம் ஆற்றில் குதித்த பெண்ணை தீயணைப்பு படையினா் தேடி வருகின்றனா்.
அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகே செல்லும் கூவம் ஆற்றின் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை பெண் ஒருவா் நடந்து வந்தாா். திடீரென அவா், கூவம் ஆற்றுக்குள் குதித்தாா். இதை, அண்ணா சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் பொதுமக்களும் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.
உடனே அவா்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த உயா்நீதிமன்ற தீயணைப்பு படையினா், அங்கு விரைந்து வந்து பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் அன்று மாலை வரை அந்தப் பெண்ணை தீயணைப்பு படையினா் கண்டறிந்து மீட்க முடியவில்லை.
இச்சம்பவம் தொடா்பாக திருவல்லிக்கேணி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். அந்தப் பெண் யாா்? என்ன காரணத்துக்காக தற்கொலை முடிவு எடுத்தாா்? என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.