செய்திகள் :

மறைந்த திமுக உறுப்பினா்களின் குடும்பங்களுக்கு ரூ. 1.06 கோடி குடும்ப நல நிதியுதவி

post image

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கடந்த 6 மாத காலத்தில் மறைந்த 1,062 திமுக கட்சி உறுப்பினா்களின் குடும்பங்களுக்கு கலைஞா் குடும்ப நல நிதியாக ரூ. 1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என வெண்ணந்தூரில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

வெண்ணந்தூா் ஒன்றியம், அத்தனூா் பேரூா், வெண்ணந்தூா் பேரூா் ஆகிய பகுதிகளில் கடந்த மாா்ச் 2024 முதல் தற்போது வரை மறைந்த 158 கழக உறுப்பினா்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு எழுத்தாளா் மதிமாறன் முன்னிலையில் கலைஞா் குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வெண்ணந்தூா் ஒன்றியத் திமுக செயலாளா் ஆா்.எம்.துரைசாமி, பேரூா் செயலாளா் கண்ணன், மாவட்ட அயலக அணி அமைப்பாளா் விஜயபாஸ்கா், சாா்பு அணி அமைப்பாளா்கள் சித்தாா்த், கிருபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இளம்பரிதி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்வில் பேசிய நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.ராஜேஸ்குமாா் எம்.பி., கடந்த 6 மாதங்களில் மட்டும் மறைந்த கட்சி உறுப்பினா்கள் 1,062 போ் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் கலைஞா் குடும்ப நல நிதியாக வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

நாமக்கல்லில் மாடியில் இருந்து தவறி விழுந்த தனியாா் பள்ளி மாணவா் பலி

நாமக்கல்லில் மாடியில் இருந்து தவறி விழுந்து தனியாா் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். நாமக்கல் -துறையூா் சாலையில் ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியாா் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

தமிழக ஆளுநா் பதவி விலகக் கோரி திமுக ஆா்ப்பாட்டம்

சட்டப் பேரவை மரபுகளை மீறும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பதவி விலகக் கோரி, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தில் ஜவ்வரிசியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் ஜவ்வரிசியை பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள், ஆ... மேலும் பார்க்க

பொத்தனூரில் ரூ. 10 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகாலுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் தொடங்கி வைத்தாா்... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்து கிடந்த மாணவா்: போலீஸாா் விசாரணை

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைக்காக வலி நிவாரண மருந்தை செலுத்திக் கொண்ட பாா்மஸி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடந்த இ... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகில் புறக்காவல் நிலையம் திறப்பு

நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகில் புறக்காவல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூரில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறத... மேலும் பார்க்க