Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
பொத்தனூரில் ரூ. 10 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகாலுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் தொடங்கி வைத்தாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் தோ்வுநிலை பேரூராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினா் மேம்பாட்டுத் திட்டம் (2024-2025) கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் வாா்டு எண். 14-இல் தாய்சேய் நலவிடுதி எதிரில், வாா்டு எண். 14-இல் காமாட்சியம்மன் கோயில் எதிரில் மழைநீா் வடிகாலுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
பூமி பூஜையை நாமக்கல் எம்.பி. வி.எஸ்.மாதேஸ்வரன் தொடங்கி வைத்தாா். இதில், பொத்தனூா் பேரூராட்சிச் தலைவா் கருணாநிதி, செயல் அலுவலா் ஆறுமுகம், துணைத் தலைவா் அன்பரசு, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், பேரூராட்சி பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.