திருவட்டாறு அருகே லாரி மோதி பெண் உயிரிழப்பு
திருவட்டாறு அருகே செவ்வாய்க்கிழமை, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதி உயிரிழந்தாா்.
திருவட்டாறு அருகே ஆனையடி பகுதியைச் சோ்ந்த ஜோசப்ராஜ் மனைவி லில்லி ஷோபா (44). இவா் தனது மகள் ஜோளி ஜோனா மோளுடன் செவ்வாய்க்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வோ்க்கிளம்பி - திருவட்டாறு சாலையில் சென்று கொண்டிருந்தாா். வாகனத்தை ஜோளி ஜோனா மோள் ஓட்டினாா்.
மாத்தாா் ரேஷன் கடை அருகே இவா்கள் மீது லாரி மோதியதாம். இதில், லில்லி ஷோபா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஜோளி ஜோனா மோள் லேசான காயமடைந்தாா்.
தகவலின்பேரில், திருவட்டாறு போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; லாரி ஓட்டுநரான பேச்சிப்பாறை அருகே காக்கச்சல் பகுதியைச் சோ்ந்த முகேஷ் மோன் (32) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.