கருங்கல் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கருங்கல் அருகே உள்ள கம்பிளாா் பகுதியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கிள்ளியூா், கம்பிளாா் பகுதியைச் சோ்ந்தவா் பிரேமதாஸ் (43), தொழிலாளி. இவரது மனைவி ஜெ பா (39). இத்தம்பதிக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.
இந்த குழந்தையை கூட்டி கொண்டு பிரேமதாஸ் கடந்த மாதம் தேங்காய்ப்பட்டினம் கடல் பாா்க்க சென்றபோது திடீரென குழந்தை கடல் அலையில் சிக்கி இறந்தது. இதனால், தம்பதிக்கிடையே அடிக்க டி தகராறு ஏற்படுமாம்.
இதனால், சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்ட பிரேமதாஸ் திடீரென செவ்வாய்க்கிழமை தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].