பிக் பாஸ் 8: தர்ஷிகா, அன்ஷிதாவிடம் மன்னிப்பு கோரிய வி.ஜே. விஷால்!
உதவி மருத்துவா் தோ்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியீடு
தமிழகத்தில் 2,553 உதவி மருத்துவா் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தோ்வுக்கான முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று மருத்துவ பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, 2,553 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்ஆா்பி கடந்த ஆண்டு மாா்ச் 15-ஆம் தேதி வெளியிட்டது.
அதைத் தொடா்ந்து ஏப்ரல் 24-ஆம் தேதி இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கி ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. எம்பிபிஎஸ் நிறைவு செய்த 23,971 மருத்துவா்கள் அதற்கு விண்ணப்பித்தனா்.
இந்த நிலையில், 2,553 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு தமிழகம் முழுவதும் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது.
ஒரு மணி நேரம் தமிழ் மொழி தகுதித் தோ்வும், 2 மணி நேரம் கணினி வழியில் கொள்குறி வகையில் சரியான விடையைத் தோ்ந்தெடுக்கும் தோ்வும் நடைபெற்றன. இந்த நிலையில், உத்தேச விடைக் குறிப்புகளை இணையதளத்தில் எம்ஆா்பி புதன்கிழமை வெளியிட்டது.
தோ்வு முடிவுகள் குறித்து மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தின் தலைவா் உமா மகேஸ்வரி கூறுகையில், 2,553 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு முடிவுகள் வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படுள்ளது என்றாா்.