டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ஒருபோதும் வராது: அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி
கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கலை நிகழ்ச்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு, மழை நீா் சேகரிப்பு, குடிநீா் சிக்கனம், மரம் வளா்ப்பு, திறந்த வெளி மலம் கழிப்பு ஒழிப்பு, கால்நடைகள் பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை பொதுமக்களுக்கு நையாண்டி மேளத்துடன் கிராமிய நடனம் அமைத்து கலைக்குழுவினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மகாமகக் குளம், தாராசுரம் காய்கனிச் சந்தை, பாலக்கரை, உழவா் சந்தை, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் விழிப்புணா்வு நடைபெற்றது.