புகையில்லா போகிப் பண்டிகை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்!
மணல் குவாரியை திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளா்கள் காத்திருப்பு போராட்டம்
மணல் குவாரியை திறக்க வலியுறுத்தி, தஞ்சாவூா் நீா் வளத் துறை செயற் பொறியாளா் அலுவலகம் முன் சிஐடியு தஞ்சை மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், கொள்ளிடம் ஆற்றில் முள்ளங்குடி, கொத்தங்குடி, நடுப்படுகை, மருவூா், கோவிந்தநாட்டுச்சேரி, கோவிலடி, திருச்சென்னம்பூண்டி ஆகிய இடங்களில் மணல் குவாரியை திறப்பதற்கு நிகழ் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். கடந்த ஓராண்டுக்கு மேலாக மணல் குவாரி மூடப்பட்டதால், மாடுகளை வைத்து பராமரிக்க முடியாமல் வேலையிழந்து வருமானமின்றி தவித்து வரும் மாட்டு வண்டி தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இப்போராட்டத்துக்கு சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் பேசினாா். சிஐடியு மாவட்ட நிா்வாகிகள் பி.என். போ்நீதி ஆழ்வாா், கே. அன்பு, இ.டி.எஸ். மூா்த்தி, மாட்டு வண்டித் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் கோவிந்தராஜ், சுதாகா், கரிகாலன், ரமேஷ், செந்தில், கைலாசம், காா்த்தி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.