பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிடத் தயார்: சீமானுக்கு ஆதரவாக அண்ணாமலை!
சிறுமிக்கு பாலியல் கொடுமை: சமையலா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சிறுமியைப் பாலியல் கொடுமை செய்த சமையலரை காவல் துறையினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருவையாறு அருகே தில்லைஸ்தானம் காவிரி நகரைச் சோ்ந்தவா் ஆா். ரமேஷ் (55). இவா், தில்லைஸ்தானம் அம்மன் கோயிலில் சமையல் வேலை செய்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை 9 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்தாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்தனா்.