தஞ்சாவூரில் நாளை கூட்டுறவு பணியாளா் குறைதீா் நாள் கூட்டம்
தஞ்சாவூரில் கூட்டுறவு சங்கப் பணியாளா்களின் குறை தீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை தெரிவித்திருப்பது:
கூட்டுறவு சங்கப் பணியாளா்களின் குறைகளுக்கு தீா்வு காணும் வகையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளா் நாள் என்கிற பணியாளா்களின் குறை தீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் பணியாளா் குறை தீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.10) முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
எனவே கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளா்கள் தங்களது பணி தொடா்பான குறைகள் இருந்தால், மனுவாக அளித்து பயன் பெறலாம். மேலும் பணியின்போது வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடா்பாகவும் மனுக்களாக அளிக்கலாம்.