செய்திகள் :

வீடுதோறும் லட்சாதிபதி: `மாதா மாதம் ரூ.600 செலுத்தினால் போதும்..!’ - SBI சொல்லும் புதிய திட்டம் என்ன?

post image
மாதம் ரூ.600 கட்டினால் போதும்...நீங்கள் லட்சாதிபதி ஆகலாம் என்று சொன்னால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு அறிவிப்பை தான் சமீபத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் பெயர் 'வீடுதோறும் லட்சாதிபதி'. பெயரில் உள்ளதுப்போல, 'ஒவ்வொரு வீட்டிலும் லட்சாதிபதியை உருவாக்க வேண்டும்' என்பது இந்தத் திட்டத்தின் நோக்கம். இது ஒரு ரெக்கரிங் டெபாசிட் திட்டம் ஆகும். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைக் கட்டி வருவோம்...திட்டட்தின் முடிவில் லட்சங்கள் நம் கையில் இருக்கும். இது தான் இந்தத் திட்டத்தின் கான்செப்ட்.

யார் யார் சேரலாம்?

யார் யார் சேரலாம்?

இந்தத் திட்டத்தில் 10 வயது முதலே சேரலாம்.

எத்தனை ஆண்டுகள்?

3 - 10 ஆண்டுகள். ஆண்டுகளை பொறுத்து மாதா மாதம் செலுத்த வேண்டிய தொகை மாறுபடும்.

வட்டி எவ்வளவு?

60 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 6.75 சதவிகிதம் வட்டி கிடைக்கும்; 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமே 'கூட்டு வட்டி'. ஒவ்வொரு காலாண்டுகளில் கூட்டு வட்டி கணக்கிடப்படும். உதாரணமாக, மாதம் ரூ.600 கட்டி வருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். மூன்று மாதங்களில் இந்தத் தொகை ரூ. 1,800 ஆக சேர்ந்திருக்கும். ஆக, மூன்று மாதங்களுக்கு பிறகு, நாம் கட்டும் தொகையான ரூ.600-க்கு வட்டி இல்லாமல், ரூ.1,800-க்கு வட்டி தரப்படும். இது தான் கூட்டு வட்டி.

முன்னதாக பணம் எடுத்தால்...

ஒருவேளை முதிர்வு காலத்திற்கு முன்னரே பணத்தை எடுத்தால் நமக்கு கிடைக்கக்கூடிய பணத்தில் 0.50 - 1 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்.

ரூ.5 லட்சத்திற்குள் நமது திட்ட தொகை இருந்தால் முன்னதாக பணம் எடுக்கும்போது நாம் கட்டிய தொகையில் 0.50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்.

ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் நாம் கட்டிய தொகையில் 1 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்.

ஒருவர் மாதா மாதம்...

இந்தத் திட்டத்தின் முக்கியப் பகுதி இதோ...

ஒருவர் மாதா மாதம்...

10 ஆண்டுகளுக்கு ரூ.593,

9 ஆண்டுகளுக்கு ரூ.682,

8 ஆண்டுகளுக்கு ரூ.795,

7 ஆண்டுகளுக்கு ரூ.940,

6 ஆண்டுகளுக்கு ரூ.1,135,

5 ஆண்டுகளுக்கு ரூ.1,409,

4 ஆண்டுகளுக்கு ரூ.1,812 அல்லது

3 ஆண்டுகளுக்கு ரூ.2,502

கட்டினால் திட்டத்தின் இறுதியில் ரூ.1 லட்சம் கிடைக்கும்.

இந்தக் கட்டணத்தொகையை இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அட்டவணை...

கட்டணத் தொகை...

மேலே உள்ள அட்டவணைப்படி ஒவ்வொரு தொகைக்கும் கிடைக்க உள்ள வட்டி தொகை இதோ...

வட்டி விகிதம்...

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை ரூ.1 லட்ச திட்டத்திற்கான கணக்கு. ரூ.1 லட்சத்திற்கு மேல் வேண்டுமானால் மாதக் கட்டணத் தொகைகள் அதற்கேற்ப மாறுபடும்.

எப்போது காசு கையில் கிடைக்கும்?

நமது திட்ட காலம் முடிந்த ஒரு மாதத்தில் தொகை கொடுக்கப்படும்.

தாமதமாக கட்டினால்...

மாதா மாதம் கட்ட வேண்டிய தொகையை தாமதமாக கட்டினால் முதல் 5 ஆண்டுகள் அல்லது 5-க்கும் குறைவான ஆண்டுகளில் ஒவ்வொரு ரூ.100-க்கும் ரூ.1.50 அபராதமாக வசூலிக்கப்படும்.

5 ஆண்டுகளுக்கு மேல் ஒவ்வொரு ரூ.100-க்கும் ரூ.2 அபராதமாக விதிக்கப்படும்.

இன்னுமொரு சலுகை...

ஒரே தடவையாக மாதத் தவணையை கட்ட முடியாவிட்டால், பாதி பாதியாக பிரித்து கட்டக்கூடிய சலுகையும் உண்டு.

Financial Resolution கிரெடிட் கார்டு டு முதலீடு; 2025-ல் கட்டாயம் எடுக்க வேண்டிய 5 நிதி ரெசல்யூசன்ஸ்

'2025-ம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது?' என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் தற்போது எழுந்திருக்கும். ஆரம்பத்தில் நன்கு சென்றுகொண்டிருந்த பங்குச்சந்தை, கடந்த சில மாதங்களாக இறங்குமுகத்தில் சென்றுகொண்... மேலும் பார்க்க

Credit Card: `இனி 30 சதவிகிதம் கிடையாது...' - கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களே உஷார்

கிரெடிட் கார்டு பில்லை தாமதமாக கட்டினால் 30 சதவிகிதத்திற்கு மேல் வங்கிகள் வட்டி வசூலிக்கக்கூடாது என்ற தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் தீர்ப்பை மாற்றி தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியு... மேலும் பார்க்க