அடுத்த தலைமுறை தகுதியோட தான் வர்றாங்க! - Director Shankar Interview | Game Chang...
31 நாய்கள்; பாலத்தின் மேலிருந்து தூக்கிவீசப்பட்டதில் பறிபோன 20 உயிர்கள்... தெலங்கானா கொடூரம்!
தெலங்கானா மாநிலத்தின் அடையாளம் தெரியாத நபர்களால் பாலத்தின் மேலிருந்து 31 நாய்கள் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது எட்டுமையிலாரம் (eddumailaram) கிராமம். இந்த கிராமத்தின் அருகில் உள்ள 40 அடி பாலத்தின் மேலிருந்து நாய்கள் கால்கள் மற்றும் வாய்கள் கட்டப்பட்ட நிலையில், தூக்கி வீசப்பட்டதாக ஜனவரி 4-ம் தேதி விலங்குகள் நல அமைப்பு சார்ந்த தன்னார்வலர் ஒருவர் புகார் அளித்தார்.
இதை எடுத்து இந்திராகரன் காவல்துறையினர் இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 31 நாய்கள் பாலத்தின் மேலிருந்து வீசப்பட்டது. இதனால் அவை பலத்த காயமடைந்தன. அவற்றில் 20 நாய்கள் உடல் சிதைந்த நிலையில் சில புழுக்கள் உடலில் ஏறி இறந்த நிலையில் காணப்பட்டன.
மீதமுள்ள 11 நாய்கள் மிகுந்த காயங்களுடன் மீட்கப்பட்டு நகோவில் உள்ள பி எஃப் எ (PFA) காப்பகத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. இறந்த 20 நாய்களுக்கும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாதிரிகள் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாலத்தில் இருந்து வீசப்பட்ட நாய்கள் வேறு எங்காவது கொல்லப்பட்டு, பாலத்தில் இருந்து வீசப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு விலங்குகளை கொடுமைப்படுத்திக் கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.