செய்திகள் :

''கிரிக்கெட் போட்டியை புறக்கணியுங்கள்; எங்களுடன் நில்லுங்கள்'' - வேண்டுகோள் வைத்த பெண் ஒலிம்பியன்!

post image

சாம்பியன்ஸ் டிராபி போட்டியை புறக்கணிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுத்த ஆப்கானிஸ்தான் பெண் ஒலிம்பியன் ஃப்ரிபா ரெசாயி. யார் இந்த ஃப்ரிபா ரெசாயி? இவர் ஏன் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களிடம் இப்படியொரு கோரிக்கையை எழுப்பியிருக்கிறார்?

ஃப்ரிபா ரெசாயி, 2004-ல் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் சார்பில் ஜூடோவில் பங்கேற்றவர். 2021-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபன்கள் ஆட்சிக்கு வந்தபோது விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பு குறித்து முதலில் குரல் கொடுத்தவர்களில் ஃப்ரிபா ரெசாயியும் ஒருவர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு என சொந்த விதிகள் வேண்டும் எனவும், ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாட விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்தும் என தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்காகவும், விளையாட்டுப் போட்டிகளில் பெண்களின் விடுதலைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ஃப்ரிபா ரெசாயி.

ஃப்ரிபா ரெசாயி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டி அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கிறது. இந்த விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்ள ஆப்கானிஸ்தானின் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு (ECB) ஃப்ரிபா ரெசாயி விடுத்துள்ள உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள் ஒன்றுதான் உலகளவில் பலருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

''தலிபன் ஆட்சியால், பெண் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களே ஆப்கானிஸ்தானில் 'இல்லாதது போல்' நடந்துகொள்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாட தடை விதித்துள்ளதால் ஐ.சி.சி உறுப்பினர் விதிமுறைகள் நேரடியாக மீறப்பட்டுள்ளன. அதனால், ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் ஆண்கள் அணி மட்டும் கடந்த 18 மாதங்களில் மூன்று உலகளாவிய போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தலிபன்கள் விளையாட்டுகளில் பாலின சமத்துவத்தை மீறியுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஃப்ரிபா ரெசாயியின் போஸ்ட்

தவிர, பெண்கள் விளையாட விதித்துள்ள தடையை மாற்றும் நோக்கமும் அவர்களிடம் இல்லை. அதனால், இதை மாற்றுவது இப்போது நம் கையில்தான் உள்ளது. ஆண் விளையாட்டு வீரர்களுக்கு இணையாக பெண் வீராங்கனைகள் இருப்பார்கள் என்பதை உறுதிசெய்யும் ஐ.சி.சியின் வாக்குறுதியால் மகிழ்ச்சியடைந்த போதும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் நாடு கடத்தப்பட்டோருக்கும் இது சாத்தியமாக இல்லை'' என கவலை தெரிவித்துள்ள ரெசாயி, ''ஆப்கானிஸ்தான் ஆண்கள் அணிக்கு ஆண்டுக்கு 17 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஐ.சி.சி.யில் இருந்து நிதியாக தரப்படுகிறது. ஆனால், பெண் கிரிக்கெட் வீரர்கள் ஆப்கானிஸ்தானில் ஜிம்மிற்கு செல்லவோ அல்லது நாடு கடத்தப்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் விளையாட்டுகளில் போட்டியிடவோ அனுமதிக்கப்படுவதில்லை.

அதனால், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஆப்கானிஸ்தானின் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாட மறுத்து, ஆப்கானிஸ்தான் பெண்களுடன் ஒற்றுமையாக நிற்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் ஃப்ரிபா ரெசாயி.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Ashwin : 'இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்' - மாணவர்கள் மத்தியில் அஷ்வின் பேச்சு

சமீபத்தில் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கல்லூரி மாணவர்களிடையே பேசுகையில், 'இந்தி நம்முடைய தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்!' எனப் பேசியிருக்கிறார்.Ashwi... மேலும் பார்க்க

Two Tier Test System : 'ஐ.சி.சி முன் வைக்கும் புதிய முறை' - வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்!

டெஸ்ட் கிரிக்கெட்டை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும் வகையிலும் வருவாயைப் பெருக்கும் வகையிலும் 'Two Tier Test System' என்ற முறையை ஐ.சி.சி அமல்படுத்தும் யோசனையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.உலக ... மேலும் பார்க்க

Kohli : 'கோலியின் 'Fear of Failure' மனநிலைதான் பிரச்னை' - கமெண்டேட்டர் நானி எக்ஸ்க்ளூஸிவ்

நானி, தமிழ் கிரிக்கெட் வர்ணனையின் மிக முக்கிய குரல். நீண்டகாலமாக கிரிக்கெட் சார்ந்தே இயங்கிக் கொண்டிருப்பவர். பார்டர் கவாஸ்கர் டிராபி முடிந்திருக்கும் சூழலில் பல்வேறு கேள்விகளுடன் அவரை பேட்டிக்காக தொட... மேலும் பார்க்க

Champions Trophy : சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா ஆடுவாரா? - அணியை எப்போது அறிவிக்கும் பிசிசிஐ?

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்தத் தொடருக்கான உத்தேச அணியை ஜனவரி 12 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி கெடு விதித்... மேலும் பார்க்க

Indian Team: 'கடைசி வாய்ப்பில் கோலி; ஓய்வு அறிவிப்பை நோக்கி ரோஹித் சர்மா!' இருவரின் எதிர்காலம் என்ன?

பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணி 3-1 என தொடரை இழந்திருக்கிறது. இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் சோபிக்கவே இல்லை. தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்ததே விராட் கோலியும் ர... மேலும் பார்க்க