செய்திகள் :

சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் பகிர்ந்த பா. இரஞ்சித்!

post image

இயக்குநர் பா. இரஞ்சித் சார்பட்டா பரம்பரை 2 படத்தினைப் பற்றி விழா ஒன்றில் பேசியுள்ளார்.

ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் 2021இல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

பா. இரஞ்சித் இயக்கிய படங்களிலேயே மிகவும் வரவேற்பைப் பெற்ற படமாக சார்பட்டா பரம்பரை படமே இருக்கிறது.

சமீபத்தில் வெளியான தங்கலான் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கியது.

நடிகர் ஆர்யா மீண்டும் சார்பட்டா பரம்பரை 2 படத்தில் நடிக்க உடலை தயார் படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தனது துணை இயக்குநர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது:

இப்போதுதான் சார்பட்டா பரம்பரை 2 படத்தின் இறுதிக் காட்சியை எழுதி முடித்தேன். ஒரு படத்தினை எழுதி முடிப்பதுபோல் மகிழ்ச்சியான விஷயம் வேறு எதுவுமில்லை.

ஏற்கனவே திரைக்கதை ஆசிரியர் தமிழ்ப் பிரபா இதன் திரைக்கதையை ஒரு முறை எழுதிவிட்டார். நான் எனது பாணியில் ஒருமுறை மீண்டும் இதனை எழுதிப் பார்த்தேன். ஒரு இடத்தில் வந்து நின்றுள்ளது.

எழுதும்போது எனக்கு கிடைத்த இந்த சந்தோஷம் துணை இயக்குநர் அவருடைய புத்தகத்தை முடித்ததும் அவர் முகத்திலும் இருந்தது என்றார்.

சார்பட்டா பரம்பரை 2 திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு எப்போது தொடங்குமென குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் எதுவும் தகவல் அளிக்கவில்லை.

பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் இன்று (ஜன. 9) காலமானார். அவருக்கு வயது 80.கேரள திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும் பார்க்க

எதிர்நீச்சல் -2 வரவேற்பு குறைவு: இந்த வார டிஆர்பி பட்டியல்!

எதிர்நீச்சல் 2 தொடருக்கு கடந்த வாரம் இருந்ததை விட இந்த வாரத்துக்கு டிஆர்பி புள்ளிகள் குறைந்துள்ளது.சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ஏராளமான ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். ஒவ்வொரு வாரமும் எந்... மேலும் பார்க்க

நேசிப்பாயா மேக்கிங் விடியோ!

நேசிப்பாயா படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார். ‘நேசிப்பாயா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்ப... மேலும் பார்க்க

ஹிந்தி பிக் பாஸ்: 94 நாள்களில் வெளியேறிய ஸ்ருதிகா!

குறைவான வாக்குகளைப் பெற்றதாக ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தமிழ் நடிகை ஸ்ருதிகா வெளியேற்றப்பட்டார். அவர் மொத்தம் 94 நாள்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார். ஹிந்தியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பா... மேலும் பார்க்க

‘பிரேக்கிங் பேட்’ புகழ் வால்டர் ஒயிட் வீட்டின் மதிப்பு ரூ.35 கோடி!

‘பிரேக்கிங் பேட்’ புகழ் வால்டர் ஒயிட்டின் வீட்டின் மதிப்பு 4 மில்லியன் டாலராக (ரூ.35 கோடி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நெட்பிளிக்ஸில் வெளியாகி உலக முழுவதும் கோடிக்கணக்கான அளவில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளத... மேலும் பார்க்க