மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
முன்சிறை பகுதியில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக, முன்சிறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 9) காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், ராமன்துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூா், கீழ்குளம், சென்னித்தோட்டம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.