குமரி மாவட்டத்தில் இரவு நேர கடைகளைத் திறக்க கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க காவல் துறை அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு துணைத் தலைவா் கருங்கல் ஜாா்ஜ் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் திங்கள்கிழமைமுதல் (6.1.25) இரவு 11 மணிக்கு கடைகளை மூட வற்புறுத்தப்படுகிறது. இது, அரசு, நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் ஆகும்.
தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம். இரவுப் பணியில் பெண்கள் இருந்தால் அதற்குரிய அனுமதி வாங்க வேண்டும் என அரசும் நீதிமன்றமும் தெளிவாக குறிப்பிடுகின்றன. மாநிலம் முழுவதும் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
ஆனால், இங்கு இரவு 11 மணிக்கு கடைகளை மூட வற்புறுத்தப்படுகிறது. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்திலும் 24 மணி நேரமும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.