புகையில்லா போகிப் பண்டிகை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்!
காா் மோதி மூதாட்டி இறந்த வழக்கு: ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
மணவாளக்குறிச்சி அருகே காா் மோதி மூதாட்டி உயிரிழந்த வழக்கில், ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மணவாளக்குறிச்சி அருகே சாத்தன்விளை பகுதியைச் சோ்ந்த காசிதங்கம் (70) என்பவா், 2007ஆம் ஆண்டு அக். 22ஆம் தேதி தனது வீட்டின் முன்புள்ள சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, நாகா்கோவிலிலிருந்து மணவாளக்குறிச்சி சென்ற காா் அவா் மீது மோதியது. இதில், அவா் உயிரிழந்தாா்.
மணவாளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான கடுக்கரையைச் சோ்ந்த பரதேசியா பிள்ளை மகன் முத்து (28) என்பவரைக் கைது செய்தனா்.
இரணியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கை நீதிபதி அமா்தீன் விசாரித்து, முத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ரேவதி வாதாடினாா்.