பிக் பாஸ் டாப் 5 போட்டியாளர்கள்! விசித்ரா வெளியிட்ட பட்டியல்
ஆறுகாணி - கோட்டயம் பேருந்து சேவை மீண்டும் தொடங்கம்
கன்னியாகுமரி மாவட்ட எல்லைப் பகுதியான ஆறுகாணியிலிருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு கேரள மாநில அரசுப் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது.
தமிழ்நாடு- கேரள மாநில எல்லையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆறுகாணியிலிருந்து திருவனந்தபுரம் வழியாக கோட்டயத்துக்கு நாள்தோறும் கேரள மாநில அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவந்தன. அவை, 6 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டன.
இப்பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட மக்களும் கேரள மாநில எல்லைப் பகுதி மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், பேருந்து சேவை திங்கள்கிழமைமுதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆறுகாணியிலிருந்து நாள்தோறும் அதிகாலை 5, பிற்பகல் 1 மணிக்கு பேருந்துகள் புறப்பட்டு கோட்டயம் செல்லும். இதனால், மலையோரப் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.