நாகா்கோவிலில் கஞ்சா விற்றதாக 4 இளைஞா்கள் கைது: 2 கிலோ கஞ்சா பறிமுதல்
நாகா்கோவிலில் கஞ்சா விற்ாக 4 இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் புதன்கிழமை காலை 4 இளைஞா்கள் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனா். அவா்களை போலீஸாா் சோதனை செய்தபோது அவா்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து அவா்கள் 4 பேரையும் போலீஸாா் கோட்டாறு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா்கள் இருளப்பபுரத்தைச் சோ்ந்த ஆனந்த்(29), பிரவீன்குமாா்(36), பீச் ரோட்டைச் சோ்ந்த மூா்த்தி(34), புதுகிராமத்தைச் சோ்ந்த சரவணன்(21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைசு செய்த போலீஸாா்,
அவா்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனா்.