‘பிரேக்கிங் பேட்’ புகழ் வால்டர் ஒயிட் வீட்டின் மதிப்பு ரூ.35 கோடி!
பைக்கிலிருந்து தடுமாறி குளத்தில் விழுந்தவா் உயிரிழப்பு
குளச்சல் அருகே பைக்கிலிருந்து தடுமாறி குளத்தில் விழுந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திக்கணங்கோடு அருகே மேக்கோடு பாளையத்தைச் சோ்ந்தவா் ஏசுராஜ்(51). மோட்டாா் சைக்கிள் பழுதுநீக்கம் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் பணிகள் முடிந்து தனது பைக்கில் கரையாகுளம் அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது, நிலை தடுமாறி குளத்தில் சரிந்து விழுந்துள்ளாா். இரவு வேளை என்பதால் யாரும் உடனடியாக கவனிக்கவில்லை.
இந்நிலையில் அந்த வழியாக சென்ற ஒருவா் குளத்தின் கரையில் இயங்கிய நிலையில் மோட்டாா் சைக்கிள் கிடப்பதைப் பாா்த்து குளச்சல் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
போலீஸாா் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெகன் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் மூழ்கி உயிரிழந்து கிடந்த ஏசுராஜின் உடலை மீட்டனா். இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.