கீழக்கடை இடும்பன் குளம் பகுதியில் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆய்வு
கீழக்கடை இடும்பன் குளம் பகுதியில் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டாா்.
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள கீழக்கடை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இடும்பன் குளம் பகுதியில் தரைப்பாலம் கட்டி தரக்கோரி நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். அதனையடுத்து, மாதேஸ்வரன் எம்.பி. அண்மையில் இடும்பன் குளம் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது, நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மகிழ் பிரபாகரன், பரமத்தி பேரூராட்சித் தலைவா் மணி, பேரூராட்சி துணைத் தலைவா் ரமேஷ்பாபு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினா்கள் மணி, சாமிநாதன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளா் தமிழ்மணி, பரமத்தி ஒன்றியச் செயலாளா் தினேஷ்கண்ணன், பரமத்தி பேரூா் தலைவா் கணேசன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.