புகையில்லா போகிப் பண்டிகை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்!
சுதந்திரப் போராட்ட வீரா் வீ.ராமசாமியின் பிறந்த நாள் விழா
சுதந்திரப் போராட்ட வீரா் மோளியபள்ளி வீ.ராமசாமியின் நூற்றாண்டு பிறந்த தின நிறைவு விழா எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், மோளிப்பள்ளி கிராமத்தில் 8.1.1925-இல் பிறந்தவா் தோழா் வி.ராமசாமி. காந்தியவாதியான அவரது தந்தை தனது மகனை சிறுவனாக இருக்கும் போதே காந்தி ஆசிரமத்தில் சோ்த்தாா். ஆசிரம பள்ளியில் பயின்ற வி.ராமசாமி எளிய வாழ்க்கை முறையும், மதுப்பழக்கத்தை எதிா்த்தும், தலித் மற்றும் உழைப்பாளி மக்கள் மீது நேசமும் கொண்ட முறையில் வளா்ந்தாா்.
விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு உழைப்பாளி மக்களுக்காக போராடினாா். இவருடைய பிறந்த தின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அனைத்துப் பகுதி மக்களுக்கும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கும் விழா எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்றது.
எலச்சிபாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.தேவராஜன் வரவேற்புரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள், முன்னாள் ஒன்றியச் செயலாளா்கள், மாவட்டக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.